திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் புறக்​கணிக்​கப்​பட்ட சுகா​தா​ரத்​துறையை மேம்​படுத்த வேண்​டும் என்று தமிழக முதல்​வர் விஜய்க்​கு, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் பதவி​யேற்​றுள்​ளார். அவருக்கு ஒட்​டுமொத்த மருத்​து​வர்​கள் சார்​பாக வாழ்த்​துக்​களை தெரி​வித்து கொள்​கிறோம்.

முதல்​வர் விஜய் ஆட்​சி​யில், இந்​தி​யாவே திரும்பி பார்க்​கும் வகை​யில், தமிழகம் மிகப்​பெரிய முன்​னேற்​றம் அடை​யும் என நம்​பு​கிறோம். கடந்த திமுக ஆட்​சி​யில் முற்​றி​லும் புறக்​கணிக்​கப்​பட்ட துறை​யாக சுகா​தா​ரத்​துறை இருந்​தது.

மு.க.ஸ்​டா​லின் எதிர்​கட்சி தலை​வ​ராக இருந்த போது அரசு மருத்​து​வர்​களுக்கு நேரில் அளித்த வாக்​குறு​தியை கடைசி வரை நிறைவேற்​ற​வில்​லை. கரோனா பெருந்​தொற்று காலத்​தில் மக்​களை காப்​பாற்ற போராடி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் குடும்​பத்​துக்கு அரசு வேலையை கூட தர அக்​கறை காட்​ட​வில்​லை.

அரசு மருத்​து​வ​மனைக்கு வரும் நோயாளி​கள் எண்​ணிக்கை மூன்று மடங்​காக அதி​கரித்​துள்ள நிலை​யிலும், கடந்த 5 ஆண்​டு​களில் புதி​தாக மருத்​து​வர் மற்​றும் செவிலியர் பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட​வில்லை.

கடந்த ஆட்​சிக்​காலத்​தில் பெரும்​பாலும் பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் மிக முக்​கிய துறை​யான மகப்​பேறு துறை​யில் கூட மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறை அதி​க​மாகவே இருந்​தது.

கரோனா பேரிடரில் உயி​ரிழப்பை வெகு​வாக குறைத்​த​தில் அரசு மருத்​து​வர்​களின் பங்கு அதி​கம் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். ஆனாலும், அந்த பேரிடரில் தங்​கள் உயிரை பணயம் வைத்து பணி​யாற்​றிய 19 ஆயிரம் அரசு மருத்​து​வர்​கள் மீது 5 வருடங்​களுமே மு.க. ஸ்டா​லினின் பார்வை விழ​வில்லை என்​பது தான் வருத்​த​மான உண்​மை.

முதல்​வர் விஜய் தலை​மை​யில் புதிய ஆட்சி அமைந்​துள்ள நிலை​யில், விளிம்பு நிலை மக்​கள் பெரிதும் நம்​பி​யுள்ள அரசு மருத்​து​வ​மனை​களை மேம்​படுத்​து​வ​தில் மிகுந்த அக்​கறை காட்​டு​வார் என எதிர்​பார்க்​கிறோம்.

உயிர்​காக்​கும் துறை​யான சுகா​தா​ரத் துறைக்கு முக்​கி​யத்​து​வம் தரவேண்​டும் என்​பது முதல்​வருக்கு நன்​றாகவே தெரி​யும். அதனால், மருத்​து​வர்​களை தொடர்ந்து போராட வைப்​பதை நம் முதல்​வர் நிச்​ச​யம் விரும்ப மாட்​டார்​கள் என நம்​பு​கிறோம். உயிர்​காக்​கும் மருத்​து​வர்​களை உற்​சாக​மாக பணி​யாற்​றிடும் வகை​யில் அறி​விப்​பு​களை விரை​வில் வெளி​யிடு​வார் என நம்​பு​கிறோம்.

கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு நிவாரணம் மற்​றும் அரசு வேலைக்​கான ஆணையை தமிழக முதல்​வரின் கைகளால் வழங்க வேண்​டு​கிறோம். அரசாணை 354-ஐ அமல்​படுத்​தி, அதன்​படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in