

வண்டலூர்: வரதராஜபுரம், ஜெயலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் தனசிங் (71). இவரது பேத்தி காவ்யா (11) மண்ணிவாக்கம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனசிங், காவ்யாவுடன் பைக்கில் வண்டலூர் - முடிச்சூர் சாலை, நடேசன் பள்ளி அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. காவ்யா நிலை தடுமாறி விழுந்தார். பேருந்தின் பின் சக்கரம் உடல் மீது ஏறியதில் அங்கேயே காவ்யா உயிரிழந்தார். தனசிங் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து ஓட்டுநர் பெருமாள் (44) கைது செய்யப்பட்டார். படப்பை, கலைஞர் நகர் முரளி ராஜனின் மகள் கவுசிகா (20). தனியார் பல்கலையில் 2-ம் ஆண்டு பி.எல். படித்து வந்தார். கல்லூரி முடிந்து தன் மின்- ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வண்டலூர் ஏரி அருகே, வாலாஜா பாத் சாலையில் வந்த போது எதிரே வந்த பைக் மோதியதில் கவுசிகா உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சரவணன் (51) காயமடைந்தார்.