சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசால் மீண்​டும் நிறைவேற்றி ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்ட சித்த மருத்​துவ பல்​கலைக்​கழகத்தை அமைப்​ப​தற்​கான மசோ​தாவை, குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்​தில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழகத்தை உரு​வாக்​கு​வதற்​கான மசோ​தா, கடந்த 2022-ம் ஆண்டு சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டது.

இந்த மசோ​தா​வில் பல்​கலைக்​கழகத்​தின் வேந்​த​ராக முதல்​வர் செயல்​படு​வார் என குறி்ப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்த பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​காக தமிழக அரசு 20 ஏக்​கர் நிலத்​தை​யும் மாதவரம் அரு​கில் ஒதுக்​கியது.

ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்ட நிலை​யில், ஆளுநர் தரப்​பில் இருந்து மசோதா தொடர்​பாக விளக்​கம் கோரப்​பட்​டது. அதற்​கு, அரசு சார்​பில் விளக்​கங்​கள் அளிக்​கப்​பட்​டன.

அதன்​பின்​னரும், மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காத ஆளுநர், கடந்த ஆண்டு மசோ​தாவை திருப்​பியனுப்​பி​னார். இதையடுத்​து, கடந்த அக்​.16-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழக மசோதா மீ்ண்​டும் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டது.

அத்​துடன், மசோதா தொடர்​பாக ஆளுநர் தெரி​வித்த கருத்​துகளை ஏற்க மறுத்து பேர​வை​யில் தீர்​மான​மும் நிறைவேற்​றப்​பட்​டது. சட்​டப்​பேர​வை​யில், இரண்​டாவது முறை​யாக நிறைவேற்றி அனுப்​பப்​படும் மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்க வேண்​டும் என்ற நிலை​யில், சித்த மருத்​து​வப் பல்​கலைக்​கழக மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்​காக ஆளுநர் அனுப்​பி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்
உயர் கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழி கட்டாயம் எனும் ஆணைக்கு வேல்முருகன் எதிர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in