150 ஆண்டுகளை கடந்த வந்தே மாதரம் பாடல்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி - ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

150 ஆண்டுகளை கடந்த வந்தே மாதரம் பாடல்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி - ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
Updated on
1 min read

சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு விழாவை கொண்​டாடும் வகை​யில் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு மாநில அளவி​லான கட்டுரைப் போட்டி நடத்​தப்பட உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வங்க கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்​ஜி​யால் இயற்​றப்​பட்ட வரலாற்று சிறப்​புமிக்க தேசிய பாடலான வந்தே மாதரம் இந்​தி​யா​வின் ஒற்​றுமை, கலாச்​சார பெருமை மற்​றும் சுதந்​திர போராட்​டத்தை ஊக்​கு​வித்த தியாக உணர்​வின் சக்​தி​ வாய்ந்த சின்​ன​மாக விளங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் தற்​போது, 150 ஆண்​டு​களை கடந்​திருக்​கிறது. இந்த முக்​கிய​மான மைல்​கல்லை போற்​றும் வகை​யிலும், கொண்​டாடும் வித​மாக​வும் தமிழகம் முழு​வதும் உள்ள பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கட்டுரைப் போட்டிகள் நடத்​தப்பட உள்​ளன.

இப்​போட்​டிகள் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு தனித்​தனி​யாக, தமிழ் மற்​றும் ஆங்​கில மொழிகளில் நடத்​தப்​படும். மாணவர்​கள் தங்​களது கட்​டுரைகளை கைப்பட தமிழ் அல்​லது ஆங்​கிலத்​தில் எழுதி ஏதாவது ஒரு பிரி​வில் சமர்​ப்பிக்​கலாம். பள்ளி மாணவர்​கள் 10 பக்​கங்​களுக்​கும், கல்​லூரி மாணவர்​கள் 15 பக்​கங்​களுக்​கும் மிகாமல் கட்​டுரைகளை எழுத வேண்​டும்.

ஒவ்​வொரு பிரி​விலும் முதல் பரிசு பெறு​பவருக்கு ரூ.50 ஆயிர​மும், இரண்​டாம் பரிசு பெறு​பவருக்கு ரூ.30 ஆயிர​மும், மூன்​றாம் பரிசு பெறு​பவருக்கு ரூ.25 ஆயிர​மும் ரொக்​கப் பரி​சாக வழங்​கப்​படும்.

அதற்​கேற்ப போட்​டிகள் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்​காக ‘இந்​திய சுதந்​திர போராட்​டத்​தில் வந்தே மாதரத்​தின் பங்​களிப்​பு’, என்ற தலைப்​பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​காக ‘வந்தே மாதரம் பாடலால் விழித்​தெழுந்த பாரதம்’ என்ற தலைப்​பிலும், கல்​லூரி மாணவர்​களுக்​காக ‘2047-ல் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கு​வ​தில் வந்தே மாதரம் பாடலின் பங்​கு’ என்ற தலைப்​பிலும் நடத்​தப்​படும்.

எழு​திய கட்​டுரைகளை ‘ஆளுநரின் துணை செயலர், ஆளுநர் மாளி​கை, சென்னை - 600022’ என்ற முகவரிக்கு வரும் ஜன.31-ம் தேதிக்​குள் அனுப்பி வைக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

150 ஆண்டுகளை கடந்த வந்தே மாதரம் பாடல்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி - ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
ஆட்டோவில் ஏறிய பெண் காவலர் 2 கி.மீ. தூரம் கடத்தல்: மது போதையுடன் வாகனத்தை ஓட்டிய நபர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in