

சென்னை: டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 11, 12-ம் தேதிகளில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆளுநர் ரவியை சந்தித்து, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்தச் சூழலில், நேற்று ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
3 நாட்கள் அவர் பிஹாரில் தங்கியிருப்பார். அதன்பின் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் டெல்லியில் அமித் ஷாவை சந்திப்பார் என தெரிகிறது. பின்னர் ஜன.14-ம் தேதி சென்னை திரும்புகிறார்.