நேதாஜி 129-வது பிறந்தநாள்: ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் இரா.பாஸ்கரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் இரா.பாஸ்கரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

Updated on
1 min read

சென்னை: நேதாஜி 129-வது பிறந்த நாளை​யொட்​டி, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அமைச்​சர்​கள் மரி​யாதை செலுத்​தினர். சுதந்​திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்​திர​போஸின் 129-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்​டி, சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்​தில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இதுகுறித்​து, ஆளுநர் ஆர்​.என்​.ரவி வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “பராக்​கிரம தினம் ஆக கடைப்​பிடிக்​கப்​படும் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ் பிறந்த நாளில், அசைக்க முடி​யாத துணிச்​சலும், தளராத மனவுறு​தி​யும் கொண்ட ஒரு தலை​வரை நாம் போற்​றுகிறோம்.

அவரது அச்​சமற்ற தலை​மை, லட்​சக்​கணக்​கான இந்​தி​யர்​களிடையே தன்​னம்​பிக்​கை, ஒற்​றுமை மற்​றும் தேசிய உணர்வை தட்​டி​யெழுப்​பியது” என தெரி​வித்​துள்​ளார்.

தமிழக அரசு சார்​பில் சென்னை காம​ராஜர் சாலை​யில் உள்ள நேதாஜி சிலைக்கு கீழ் அலங்​கரிக்​கப்​பட்டு வைக்​கப்​பட்ட படத்​துக்கு அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரி​யா, துணை மேயர் மகேஷ்கு​மார் ஆகியோர் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர்.

அதே​போல சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில், தமிழ்​நாடு காங்​கிரஸ் மூத்த தலை​வர் பலராமன் மற்​றும் நிர்​வாகி​கள் நேதாஜி படத்​துக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

மேலும், அரசி​யல் கட்சி தலை​வர்​களும் நேதாஜி பிறந்​த​நாளை முன்​னிட்​டு, வாழ்த்​துக்​களை தெரி​வித்​தனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், ” வெள்​ளை​ய​னால் கறை படிந்த என் தேசத்​தை, அவனின் ரத்​தம் கொண்டே துடைத்து சுதந்​திர இந்​தி​யாவை மலரச் செய்​வேன் என முழங்​கி, சுதந்​திர பிரகடனம் செய்து இந்​திய தேசிய ராணுவத்தை கட்​டமைத்து வெள்​ளை​யனுக்கு சிம்ம சொப்​பன​மாக போர் முழக்​கம் செய்​தவர்.

வங்​கத்து சிங்​கம், பாரத தேசத்​தின் ஒப்​பற்ற தலை​வர், இன்​றைய இளைஞர்​களுக்​கும் நரம்பு புடைக்​கும் இவர் பெயரைக் கேட்​டால் வீரமிகு சுபாஷ் சந்​திர போஸ் பிறந்த தினத்​தில் அவரது புகழை போற்றி வணங்​கு​கிறேன்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்பெருந்​தகை வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் “இந்​திய சுதந்​திரப் போராட்​டத்​தின் மாபெரும் புரட்​சி​யாள​ரான நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ் பிறந்​த​நாளில் அவருக்கு வீர​வணக்​கம் செலுத்​துகிறோம்.

அவரது வீரம், உறு​தி​யான நிலைப்​பாடு மற்​றும் அறி​வு​சார்ந்த தலை​மைத்​து​வத்​தால், நாட்டை சுதந்​திரப் பாதை​யில் வழி நடத்​தி​னார். தேசத்​திற்​கான அவரது அர்ப்​பணிப்பு எப்​போதும் ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் உத்​வேக​மாக இருக்​கும்” என தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் இரா.பாஸ்கரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.</p></div>
திமுக அரசை அகற்ற ஒன்றுசேர வேண்டும்: கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in