திமுக அரசை அகற்ற ஒன்றுசேர வேண்டும்: கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் அழைப்பு

திமுக அரசை அகற்ற ஒன்றுசேர வேண்டும்: கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் அழைப்பு
Updated on
1 min read

கோவை: ‘தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத திமுகவை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வரவேண்டும்’ என, தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கோவை ஈச்சனாரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கைகோத்து ஒரே அணியில் இருக்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறிய, மக்களுக்கு எதிரான திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி - அதிமுகவை மற்றகட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.

கறிக்கோழி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

திமுக அரசை அகற்ற ஒன்றுசேர வேண்டும்: கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் அழைப்பு
கோவையில் வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in