அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது: உயர் நீதிமன்ற முழு அமர்வு முக்கிய தீர்ப்பு

அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது: உயர் நீதிமன்ற முழு அமர்வு முக்கிய தீர்ப்பு
Updated on
2 min read

சென்னை: ஆ​யுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்டி விடு​தலை செய்​வது மற்​றும் தண்​டனைக் குறைப்பு விவ​காரத்​தில் அமைச்​சர​வை​யின் பரிந்​துரைகளை ஆளுநர் தன்​னிச்​சை​யாக நிராகரி்க்க முடி​யாது. அமைச்​சர​வை​யின் முடிவு​களுக்கு ஆளுநர் கட்​டுப்​பட்​ட​வர்​தான் என்று சென்னை உயர் நீதி​மன்ற முழு அமர்வு தீர்ப்​பளித்​துள்​ளது.

சிதம்​பரம் அண்​ணா​மலை பல்​கலைக்​கழக மருத்​துவ மாணவர் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் சீனியர் மாணவ​ரான ஜான் டேவிட்​டுக்கு கடலூர் சிறப்பு நீதி​மன்​றம் அளித்த ஆயுள் தண்​டனையை உச்ச நீதி​மன்​றம் உறு​தி​செய்​தது.இதையடுத்​து, அவர் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

உயர் நீதி​மன்​றத்​தில் அவரது தாய் தொடர்ந்த வழக்​கின்​பேரில், ஜான் டேவிட்டை முன்​கூட்​டியே விடு​தலை செய்ய தமிழக அமைச்​சரவை பரிந்​துரை செய்​தது. இதை ஆளுநர் நிராகரித்து உத்​தர​விட்​டார். இதை எதிர்த்து ஜான் டேவிட்​டின் தாய், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​தார். இதே​போல, ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்​டியே விடு​தலை செய்​வது, தண்​டனை குறைப்பு வழங்​கு​வ​தில் ஆளுநரின் முடிவு​களை எதிர்த்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் தரப்​பில் சென்​னை​யிலும், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​விலும் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இதில், ‘தமிழக அமைச்​சரவை எடுக்​கும் முடிவு​களுக்கு ஆளுநர் கட்​டுப்​பட்​ட​வரே. இந்த விஷ​யத்​தில் அமைச்​சர​வை​யின் பரிந்​துரைகளை ஆளுநர் நிராகரித்​தது தவறு’ என்று சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. இதற்கு நேர்​மாறாக, ‘அமைச்​சர​வை​யின் முடிவு​களை நிராகரிக்​கும் அதி​காரம் ஆளுநருக்கு உண்​டு’ என்று மதுரை அமர்வு தீர்ப்​பளித்​தது.

இரு வேறு தீர்ப்​பு​கள் அளிக்​கப்​பட்​ட​தால், இது தொடர்​பாக 3 நீதிப​தி​கள் அடங்​கிய முழு அமர்வு விசா​ரிக்க தலைமை நீதிபதி பரிந்​துரை செய்​தார். அதன்​படி, உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா,ஜி.கே.இளந்​திரையன், சுந்​தர் மோகன் அடங்​கிய முழு அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது.

மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், “ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்டி விடு​விப்​பது, தண்​டனைக் குறைப்பு வழங்​கு​வ​தில் அரசின் பரிந்​துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடி​யாது” என்று வாதிட்​டனர். அரசுத் தரப்​பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்​னா, “உச்ச நீதி​மன்ற, உயர்நீதி​மன்​றத் தீர்ப்​பு​களின் அடிப்​படை​யில் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்​டியே விடு​தலை செய்​ய​வோ, தண்​டனை குறைப்புவழங்​கவோ அமைச்​சரவை விடுக்​கும் பரிந்​துரைகளை ஆளுந​ரால் நிராகரிக்க முடி​யாது” என்று வாதிட்​டார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்த தீர்ப்​பு: ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்டி விடு​விப்​பது, தண்​டனை குறைப்பு வழங்​கு​வ​தில் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 161-வது பிரி​வின்​கீழ் உள்ள அதி​காரங்​களை ஆளுநர் பயன்​படுத்​தும்​போது, தனக்கு பிடித்​தா​லும், பிடிக்​கா​விட்​டாலும் அமைச்​சர​வை​யின் முடிவு​களுக்கு அவர் கட்​டுப்​பட்டே நடக்கவேண்​டும். எந்த சூழலிலும், அமைச்​சர​வை​யின் நிலைப்​பாட்​டில் இருந்து மாறு​பட்ட நிலைப்​பாட்டை எடுக்க ஆளுநர் தனது விருப்​புரிமை​யைப் பயன்​படுத்த முடி​யாது.

எனவே, ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்​டியே விடு​தலை செய்​ய​வோ, தண்​டனைக் குறைப்பு வழங்​கவோ அமைச்​சரவை விடுக்​கும் பரிந்​துரைகளை ஆளுநர் தன்​னிச்​சை​யாக நிராகரிக்க முடி​யாது. அமைச்​சர​வை​யின் முடிவை நிராகரிக்​கும் அதி​காரம் ஆளுநருக்கு இல்​லை என தீர்ப்​பளித்​தனர்.

“ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்டி விடு​தலை செய்​யக் கோரும் வழக்​கு​களில் ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட இடைக்​கால உத்​தர​வு​கள் தொடரும். இந்த தீர்ப்​பின் அடிப்​படை​யில், நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களில் அந்​தந்த அமர்​வு​கள் இறுதி தீர்ப்பை பிறப்​பிக்​கலாம்” என்​றும் உத்​தர​விட்​டுள்​ளனர்.

அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது: உயர் நீதிமன்ற முழு அமர்வு முக்கிய தீர்ப்பு
கையிருப்பு ரூ.50,000, குறைந்த வருவாய் - உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in