செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு அரசு கடிதம்

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Updated on
1 min read

சென்னை: செந்​தில் பாலாஜி மீதான முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அனு​மதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழு​தி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

திமுக எம்​எல்​ஏவும், முன்னாள் அமைச்சரு​மான செந்தில் பாலாஜி, அதி​முக ஆட்சி​யில் போக்​கு​வரத்து துறை அமைச்ச​ராக இருந்தபோது, வேலை வாங்கித் தரு​வ​தாகக் கூறி பலரிடம் பணம் பெற்​ற​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. அவர் மீது சென்னை மத்​தியக் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். சட்ட விரோதப் பணப்பரி​மாற்ற தடுப்​புச் சட்​டத்​தில் அமலாக்​கத் துறையும் வழக்கு பதிவு செய்​தது. சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் அமலாக்​கத் துறை குற்​றப்​பத்​திரிகையும் தாக்​கல் செய்​தது.

எனினும், அவர் முன்னாள் அமைச்சர் என்பதால், விசாரணை நடத்த மாநில அரசின் அனு​மதி அவசி​யம். அந்த வகை​யில், கடந்த ஆண்டு திமுக ஆட்​சி​யின் ​போது, ஆளுநரின் ஒப்​புதல் கோரி அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பியது. ஆனால், மாநில அரசு மூல​மாகவே ஆளுநருக்கு மனு அனுப்​ப வேண்டும் என கூறி கடிதம் திருப்பி அனுப்​பப்பட்​டது.

இந்நிலை​யில், ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதை தொடர்ந்​து, செந்​தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்​றும் விசாரணைக்கு அனு​மதி கோரி தலை​மைச் செயலருக்கு அமலாக்​கத் துறை மே 15-ல் கடிதம் எழு​தி​யது. இதையடுத்து, செந்தில் பாலாஜி மீதான புகாரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய ஆளுநரின் அனுமதியை தவெக அரசு கோரியுள்ளது. முதல்வர் விஜய் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p> செந்தில் பாலாஜி</p></div>
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் சூசகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in