கனிமவள குற்றங்களுக்கு அபராதம் குறைப்பு: அரசாணையை திரும்ப பெற அரசுக்கு கால அவகாசம்

உயர் நீதிமன்றம் உத்தரவு
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on: 
1 min read

மதுரை: கனிமவளக் குற்​றங்​களுக்​கான அபராதத்தை குறைத்​தும், தவணை முறை​யில் அபராதம் செலுத்​தவும் வகை செய்​யும் அரசாணையை திரும்​பப் பெற அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக அப்​துல் கலாம் அறி​வியல் விவசாயிகள் மற்​றும் மக்​கள் பாது​காப்பு கூட்​டமைப்​பின் தலை​வர் ஏபல் மூர்த்தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருந்​ததாவது: கனிமவளத் துறை ஜன. 22-ல் சட்​ட​விரோத குவாரி​களுக்கு அபராதம் விதிப்​பது தொடர்​பாக அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

அதில் அனுமதிக்​கப்​பட்ட அளவைவிட அதிக அளவு குவாரி செய்​வது மற்​றும் அனுமதி​யற்ற இடங்​களில் குவாரி செய்​வது என்ற வேறு​பாடுகள் இல்​லாமல் ஒரு மெட்​ரிக் டன்​னுக்கு ரூ.25 மட்​டுமே அபராத​மாக விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டுள்​ளது.

அது​வும் அபராதத் தொகையை மொத்​த​மாக வசூலிக்​காமல் முதலில் 20 சதவீதம் செலுத்​தினால் போதும். எஞ்​சிய 80 சதவீதத் தொகையை 6 தவணைகளாக செலுத்​தலாம் எனவும் கூறப்​பட்​டுள்​ளது. கனிமவளக் குற்​றங்​களில் ஈடு​படுவோரை பாது​காக்​கும் வகை​யில் அரசாணை உள்​ளது. முன்பு கனிமவள முறைகேடுகளில் தொடர்​புடைய​வர்​களுக்கு அதி​கபட்​சம் ரூ.5 லட்​சம் வரை அபராதமும், 5 ஆண்​டுகள் சிறை தண்​டனையும் வழங்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றமும் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. அந்த உத்​தரவை பின்​பற்​றாமல் அபராதத்தை குறைத்​தும், சலுகை வழங்​கி​யும் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, அரசாணையை ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் வேல்​முருகன், ராமகிருஷ்​ணன் அமர்வு விசா​ரித்​தது. அரசு தரப்​பில் அரசாணையை திரும்​பப் பெற கால அவகாசம் வேண்​டும் என கோரப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி​கள், அரசாணையை திரும்​பப் பெறு​வது தொடர்​பாக உரிய முடிவெடுத்து நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு, விசா​ரணையை நவ.27-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தனர்.

Santhanakoodu Festival
கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

X