சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து

சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து
Updated on
1 min read

சென்னை: கர்​நாட​கா​வில் இருந்து தமிழகத்​துக்​குள் வரக்​கூ​டாது என சுற்​றுலா வாகன ஓட்​டுநரை தாக்கி சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட நபர் மீதான குண்டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு எழுச்​சிக் கழகத்​தின் நிறு​வனத் தலை​வர் சிலம்​பரசன், அதன் கொள்கை பரப்​புச் செய​லா​ளர் அப்​துல் மாலிக் ஆகியோர் கர்​நாட​கா​வில் இருந்து ஈரோடு வந்த சுற்​றுலா வேனை மறித்​து, அதன் ஓட்​டுநரை தாக்​கி, கர்​நாட​கா​வில் இருந்து தமிழகத்​துக்​குள் யாரும் வரக்​கூ​டாது என மிரட்டி சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டிருந்​தனர்.

தமிழகம் மற்​றும் கர்​நாடக மக்​களிடையே பகைமை மற்​றும் பதற்​றத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் செயல்​பட்​ட​தாக, இவர்​களை ஈரோடு வடக்கு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

பின்​னர் சிலம்​பரசனை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க ஈரோடு மாவட்ட ஆட்​சி​யர் உத்​தர​விட்​டார்.

அதன்​படி கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள சிலம்​பரசன், தன் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட நடவடிக்​கையை ரத்து செய்​யக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் என். சதீஷ்கு​மார், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்​னா, “இந்த விவ​காரத்​தில் குண்​டர் தடுப்​புச் சட்​டம் தவறு​தலாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

உண்​மை​யில் என்ன நடந்​தது என்​பதை சரி​யாக விசா​ரிக்​காமல் அதி​காரி​கள் கண்​மூடித்​தன​மாக முடிவு எடுத்​துள்​ளனர்” என வாதிட்​டார்.

இதற்கு அரசு தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், சிலம்​பரசன் மீதான குண்​டர் தடுப்​புச் சட்ட நடவடிக்​கையை ரத்து செய்து உத்​தர​விட்​டனர்.

சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து
சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் வெளிநாட்டு வேலை ஆசையில் சிக்கிவிடாதீர்கள்: இளைஞர்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in