சென்னை | ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில், உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு வரப்​பட்ட ரூ.52.33 லட்​சம் மதிப்​பிலான தங்க கட்​டிகள், பணம் சிக்​கியது.

சென்னை ரயில்வே கோட்ட முது​நிலை கோட்ட பாது​காப்பு ஆணை​யர் வல்​லேஸ்வர பாபுஜி உத்​தர​வின் பேரில், சென்ட்​ரல் ஆர்​பிஎஃப் காவல் ஆய்​வாளர் மதுசூதனரெட்டி மேற்​பார்​வை​யில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் மற்​றும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் ஆகியோர் நேற்று மதி​யம் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, கோயம்​புத்​தூரில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு விரைவு ரயில் வந்​தது. அதில் இறங்கி வந்த பயணி​களில், ஒரு​வர் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது.

அவரை தடுத்து நிறுத்​தி, அவரது பைகளை சோதித்​த​போது, அதில் ரூ.44,83,257 மதிப்​பிலான 4 தங்ககட்டிகள் மற்​றும் ரூ.7.50 லட்​சம் ரொக்​கம் இருந்​தது.

இதற்​கான ஆவணங்​களை அவர் சமர்ப்​பிக்​க​வில்​லை. இதுகுறித்து விசா​ரித்த போது, அந்தநபர் சேலத்​தைச் சேர்ந்த பத்​ம​நாபன் ஜெய​ராஜ் (43) என்​பதும், வியா​பாரத்​துக்​காக தங்​கக் கட்​டிகள், பணத்தை எடுத்து வந்​ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தங்​கம், ரொக்​கப் பணத்தை பறி​முதல் செய்​தனர். தொடர்ந்​து, மேல்​நட​வடிக்​கைக்​காக, தங்​ககட்​டிகள், பணத்தை வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை நாம் புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in