தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை நாம் புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி பிரச்சாரம்

செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

Updated on
1 min read

செங்கல்பட்டு: தமிழகத்தை புறக்​கணிக்​கும் பாஜகவை நாம் புறக்​கணிக்க வேண்​டும் என, உதயநிதி ஸ்டா​லின் செங்​கல்​பட்​டில் பிரச்​சா​ரம் செய்த போது கூறி​னார். செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகு​தி​யின் திமுக வேட்​பாளர் எம்​.கே.டி.​கார்த்​திக் தண்​ட​பாணியை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டா​லின் பிர​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: இந்த தேர்​தலில் 75 தொகு​திக​ளில் பிர​சா​ரத்​தை முடித்துவிட்டு செங்​கல்​பட்டு தொகு​திக்கு வந்​துள்​ளேன். இங்கு வந்து பார்த்த பின்​னர் தான் தெரி​கின்​றது, நீங்​கள் கார்த்​திக்​கின் வெற்​றியை உறுதி செய்து வைத்​துள்​ளீர்​கள்.

கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் 26,000 வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றோம். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற வைக்க வேண்​டும். அதி​முக ஆட்​சி​யில் பள்ளி மாணவ - மாண​வியருக்கு வழங்​கப்​பட்ட லேப்​டாப் திட்​டம், 2019-ம் ஆண்டு நிறுத்​தப்​பட்​டது.

முதல்​வர் அதனை கருத்​தில் கொண்டு கல்​லூரி மாணவர்​கள் பயனடை​யும் வகை​யில் 10 லட்​சம் லேப்​டாப்​பு​களை வழங்க உத்​தர​விட்​டார். மகளிர் உரிமைத் தொகையை தேர்​தலை காரணம் காட்டி நீதி​மன்​றம் சென்று நிறுத்த பார்த்​தனர்.

ஆனால், முதல்​வர் ரூ.5 ஆயிரம் வழங்​கி​னார். திரா​விட மாடல் ஆட்சி மீண்​டும் அமைந்​தால் கொடுத்த வாக்​குறு​தி​கள் அனைத்​தும் நிறைவேற்​றப்​படும். கடந்த 5 ஆண்​டு​களில் பாஜக எந்த உதவி​யும் செய்ய வில்​லை. பட்​ஜெட்​டில் கூட தமிழ்​நாடு என்ற பெயர் இல்​லை.

தமிழகத்தை புறக்​கணிக்​கும் பாஜகவை நாம் புறக்​கணிக்க வேண்​டும். அதி​முக என்ற போர்​வை​யில் பாஜக நுழைய பார்​கிறது. இந்த தேர்​தல் டெல்லி அணி, தமிழ் நாடு அணி என முதல்​வர் கூறி உள்​ளார். இதை கூறி​னால் மோடி​யின் முரட்டு அடிமை பழனி​சாமிக்கு கோபம் வரு​கின்​றது.

மாநில உரிமை​களுக்கு குரல் கொடுக்​காமல் மோடி​யின் காலில், பழனி​சாமி விழுந்து கிடக்​கிறார். எனக்கு அனுபவம் இல்லை என கூறுகிறார் பழனிச்​சாமி. எனக்கு இது​போன்று காலில் விழும் அனுபவம் இல்​லை.

சசிகலா காலில் விழுந்து பதவி பெற்ற பின், நீங்​களா முதல்​வர் பதவி கொடுத்​தீர்​கள் என கேட்​கிறார். எங்​கள் இரு​வருக்​கும் பிரச்​சினை சென்று கொண்​டிருந்​தது. தற்​போது சசிகலா உள்ளே வந்து உதயநிதி ஸ்டா​லின் பேசி​யது சரி என கூறி உள்​ளார்.

பாஜக​வுக்கு அடிமை​யாக உள்ள பத்து தோல்வி பழனிச்​சாமிக்கு அடுத்த தோல்​வியை கொடுத்து அனைத்து தோல்வி பழனிச்​சாமி ஆக்​கு​வோம். பழனிச்​சாமி இரு விரல்​களை காட்​டு​வது சின்​னம் அல்​ல.11-வது தோல்​வியை குறிக்​கிறது.

உதய சூரியன் சின்​னத்​தில் வாக்கு செலுத்தி கார்த்​திக் தண்​ட​பாணியை வெற்றி அடைய செய்​வோம்​.செங்​கல்​பட்​டு தொகு​தி​யை வளர்ச்​சி அடைய செய்​வோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.</p></div>
சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரித்து அனுப்பிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in