வேப்பூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோப்புப் படம் | எஸ்.கோபு

கோப்புப் படம் | எஸ்.கோபு

Updated on: 
1 min read

கடலூர்: கடலூர் மாவட்​டம் வேப்​பூரில் வாரந்​தோறும் வெள்​ளிக்​கிழமை ஆட்​டுச்​சந்தை நடை​பெறு​வது வழக்​கம். இந்த சந்​தைக்கு சுற்​று​வட்​டாரத்​தில் உள்ள 50-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து விவசாயிகள் தங்​களது ஆடுகளை விற்​பனைக்கு கொண்டு வரு​வார்​கள். அரியலூர், பெரம்​பலூர், திருச்சி, சேலம், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வியாபாரி​கள் ஆடுகளை வாங்​கிச் செல்​வார்​கள்.

தீபாவளியை முன்​னிட்டு இந்த வாரம் வியாழக்​கிழமை மதி​யம் முதலே ஆட்​டுச்​சந்தை தொடங்கி விற்​பனை களைகட்​டியது. அதில் வெள்​ளாடு, கொடி​யாடு, செம்​மறி ஆடுகள் விற்​பனைக்​காக கொண்டு வரப்​பட்​டன. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது.

இது​குறித்து சந்தை ஒருங்​கிணைப்​பாளர் கூறும்​போது, “இன்று 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆடுகள் விற்​பனையான நிலை​யில், ரூ.3 கோடிக்கு வர்த்​தகம் நடை​பெற்​றுள்​ளது. கடந்த ஆண்டு ரூ.5 கோடிக்கு விற்​பனையான நிலை​யில் தற்​போது விற்​பனை குறைந்​துள்​ளது. வியாபாரி​கள் சிலர் கிடை அமைத்​துள்ள இடத்​துக்கே சென்று ஆடுகளை வாங்கி விடுவ​தா​லும், புதிய சந்​தைகள் வர​வாலும் விற்​பனை குறைந்​திருக்​கலாம்” என்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம் | எஸ்.கோபு</p></div>
ஆந்திர கடற்பகுதியில் சென்னை மீனவர்கள் 5 பேர் சடலம் மீட்பு; 4 பேரை தேடும் பணி தீவிரம்

X