இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஜி.கே.வாசன் பதில்

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஜி.கே.வாசன் பதில்
Updated on
1 min read

அரூர்: இடைத்​தேர்​தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து நிர்​வாகி​களிடம் ஆலோ​சித்து முடிவு அறிவிக்​கப்​படும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​தார்.

தரு​மபுரி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தாராபுரம், மது​ராந்​தகம் ​தேர்​தலில் யாருக்கு ஆதர​வளிப்​பது என்​பது குறித்து மாநில, மாவட்ட நிர்​வாகி​கள், பொறுப்பாளர்​களு​டன் ஆலோசித்து அறிவிக்​கப்​படும்.

தரு​மபுரியை வறட்சி பாதித்த மாவட்​ட​மாக அறிவிக்க வேண்​டும். அரூரை தனி மாவட்​ட​மாக அறிவிக்க வேண்​டும் சமீப கால​மாக பொது மேடைகளில் தரக்​குறை​வான பேச்​சுகள், தனி மனிததாக்​குதல், ஆபாசப் பேச்​சுகள் அதி​கரித்து வரு​கிறது. இது நம்​முடைய கலாச்​சா​ரத்​துக்கு ஏற்​புடையது அல்ல. யுபிஐ பண பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்ற அறி​விப்பை மத்​திய அரசு திரும்​பப் பெற வேண்​டும். இவ்வாறு தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஜி.கே.வாசன் பதில்
“272 எம்பிக்கள் ஆதரவு இருப்பவரே பிரதமராக முடியும்” - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in