வெளிப்படை தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது: ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் “60 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி - அரசியல் மாற்றம் மக்களின் எண்ண ஓட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் “60 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி - அரசியல் மாற்றம் மக்களின் எண்ண ஓட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated on
1 min read

சென்னை: வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடக்​கும் தவெக ஆட்​சி​யில் ஊழல் குறைந்​துள்​ளது என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​தார்.

தமாகா சார்​பில் 60 ஆண்​டு​களுக்​குப்​பின் தமிழகத்​தில் ஏற்​பட்ட ஆட்சி - அரசி​யல் மாற்​றம் மக்​களின் எண்ண ஓட்​டம் என்ற தலைப்​பில் கருத்​தரங்​கம், சென்னை ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடந்​தது.

கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மை​யில் நடந்த கருத்​தரங்​கில் ஊழலற்ற நிர்​வாகம் என்று கட்​சி​யின் மாநில துணை தலை​வர் விடியல் எஸ்​.சேகர், வெளிப்​படை தன்மை என்று மாநில துணை தலை​வர் ஏ.எஸ்​.​முனவர் பாட்​சா, இளைஞர்​களின் சக்தி என்று மாநில பொதுச்​செய​லா​ளர் ராஜம் எம்​பி.​நாதன், சாமானியர்​களும் சாதித்த தேர்​தல் என்று கொள்கை பரப்பு செய​லா​ளர் கே.ஆர்​.டி.ரமேஷ் ஆகியோர் பேசினர்.

இறு​தி​யாக, ஜி.கே.​வாசன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மீண்​டும் காம​ராஜர் ஆட்சி வர வேண்​டும். கல்​வி, தொழில், விவ​சா​யம் மற்​றும் சுகா​தா​ரம் ஆகிய முக்​கி​யத் துறை​களில் முதன்மை மாநில​மாக தமிழகத்தை மாற்ற வேண்​டும்.

குறிப்​பாக, தமிழகத்​தில் முழு மது​விலக்கை அமல்​படுத்​தத் தேவை​யான நடவடிக்​கைகளை தொடர்ந்து நாம் வலி​யுறுத்​து​வோம். காம​ராஜர், மூப்​ப​னார் என்​றாலே நேர்​மை, எளிமை, தூய்​மை, வெளிப்​படை தான். ஆனால், கடந்த 60 ஆண்​டு​கால திரா​விட ஆட்​சி​யில் அவை​ எது​வும் இல்​லை. சுயநலம்தான் இருந்​தது. பொது நலம் இல்​லை.

தவெக ஆட்சி வந்த பிறகு ஊழல் குறைந்து கொண்​டிருக்​கிறது. குறைக்​கும் முயற்​சிகள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்றன. வெளிப்​படைத் தன்மை உள்​ளது. நல்ல பணி​களை நாங்​கள் வரவேற்​கிறோம். மக்​களின் கோரிக்​கைகளை உடனுக்​குடன் ஆட்​சி​யாளர்​களின் கவனத்​துக்கு கொண்டு செல்​லும் பால​மாக தமாகா தொடர்ந்து செயல்​படும். மக்​களின் எண்​ணங்​களை ஆட்​சி​யாளர்​கள் பிர​திபலிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

யாருக்கு ஆதர​வு? - மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, கம்​யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி உறு​தி​யாகி​யுள்​ளது. இரண்டு தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் தீவிரமடைந்​துள்​ளது. நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்த பாமக, இந்த இடைத்​தேர்​தலில் யாருக்​கும் ஆதரவு இல்லை என்று அறி​வித்​து​விட்​டது. அதே கூட்​ட​ணியில் தேர்​தலை சந்​தித்த தமா​கா, இடைத்​தேர்​தல் நிலைப்​பாட்​டை இன்​று அறிவிக்​க வாய்ப்​புள்​ளது.

<div class="paragraphs"><p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் “60 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி - அரசியல் மாற்றம் மக்களின் எண்ண ஓட்டம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.</p></div>
‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in