ஜி.கே.வாசன் நாளை முதல் பிரச்சாரம்: 16 நாட்கள் சுற்றுப்பணம்

ஜி.கே.வாசன் | கோப்புப் படம்
ஜி.கே.வாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் பாஜக-வின் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடுகிறது. இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார்.

6-ம் தேதி கும்பகோணம், 7-ம் தேதி திருவையாறு, அரியலூர், லால்குடி, 8-ம் தேதி நன்னிலம், மன்னார்குடி, பாபநாசம், தஞ்சாவூர், 10-ம் தேதி சாத்தூர், கிள்ளியூர், 11-ம் தேதி ராணிப்பேட்டை, 12-ல்கும்பகோணம், 13-ல் ஈரோடு மேற்கு, 14-ம் தேதி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்கிறார்.

15-ம் தேதி கிள்ளியூர், 16-ம்தேதி தருமபுரி, எடப்பாடி, குமாரப்பாளையம், 17-ம் தேதி அவிநாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு மேற்கு, 18-ம் தேதி நத்தம், ஒட்டன்சத்திரம், 19 மற்றும் 20 தேதிகளில் கும்பகோணம், ராணிப்பேட்டை, 21-ம் தேதி சென்னையில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜி.கே.வாசன் | கோப்புப் படம்
மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய தமிழகத்தின் பங்கு முக்கியம்: நிர்வாகிகளுக்கு மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in