

சென்னை: வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் வழங்கிய இந்திய சமூக நல அமைப்பின் செயலாளர் ஏ.ஜெ.ஹரிகரன் கூறியதாவது: கடந்த அக்டோபர் 6-ம் தேதி என்னை பார்க்க வந்த ஒருவர் ஒரு பென்டிரைவையும் துண்டு சீட்டையும் கொடுத்தார்.
அதில், வீரமணி மற்றும் சாந்தியின் பெயர் இருந்தது. வீடியோவை பார்த்தபோது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது தெளிவாக தெரிந்தது. உடடினயாக பென் டிரைவை போலீஸாரிடம் ஒப்படைத்தேன். உடனே புகாரும் கொடுத்தோம். மறுநாளே வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை.
வீரமணி வீட்டில் சோதனை செய்யச் சென்றபோது என்னை அழைத்துச் சென்றனர். அங்கு சென்றபோதுதான் வீடியோவில் இருப்பது தொழில் அதிபர் வீரமணி என்பது தெரிந்தது. போலீஸாரிடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவில் இருப்பதும், இவரும் ஒரே ஆள்தான் என்றேன். நீதிமன்றம் சரியான வழிகாட்டல்களை வழங்கி உள்ளது. இந்த வழக்கு தற்போது சரியான பாதையில் செயல்கிறது என்று தெரிவித்தார்.