ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிலிருந்து கீதாஞ்சலி விடுவிப்பு

துணை ஆணையர் கீதா நியமனம்
கீதாஞ்சலி,கீதா

கீதாஞ்சலி,கீதா

Updated on: 
1 min read

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி​யின் போக்சோ வழக்கை விசா​ரித்து வரும் சிறப்பு புல​னாய்வு குழு​வில் இருந்து காவல் துணை ஆணை​யர் கீதாஞ்​சலி விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், கீழ்ப்​பாக்​கம் துணை ஆணை​யர் கீதாவைப் புதி​தாக நியமித்து டிஜிபி உத்​தர​விட்​டுள்​ளார்.

16 வயது சிறுமி தற்​கொலை செய்து கொண்ட வழக்​கில் 22 ஆண்​டு​களுக்​குப் பிறகு ஜெம் வீரமணி மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது, தற்​கொலைக்​குத் தூண்​டிய​தாக​வும் ஜெம் வீரமணி மீது கூடு​தலாக ஒரு பிரிவு சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இது ஒரு​புறம் இருக்க கல்வி உதவி வழங்​கியதை சுட்​டிக் காட்டி சொகுசு காரில் சிறுமியை வீரமணி பாலியல் வன்​கொடுமை செய்​த​தாகச் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​விடம் மற்​றொரு புகார் அளிக்​கப்​பட்​டது. அதுகுறித்​தும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் விசா​ரணை அதி​காரி​யாக இருந்த துணை ஆணை​யர் கீதாஞ்​சலி, சிறப்​பு புல​னாய்​வுக் குழு​வில் இருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். இதற்​கான உத்​தரவை டிஜிபி பிறப்​பித்​துள்​ளார். கீதாஞ்​சலி​யின் தனிப்​பட்ட விருப்​பத்​தின் பேரிலேயே அவர் நீக்​கப்​பட்​ட​தாகத் தகவல் வெளி​யானது. ஆனால், அது தொடர்​பான தகவல் டிஜிபி உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

கீதாஞ்​சலிக்கு மாற்​றாக சென்னை கீழ்ப்​பாக்​கம் காவல் மாவட்ட துணை ஆணை​யர் கீதா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வினரோடு தற்​போது இணைந்து பணி​யைத் தொடங்கி உள்​ளார். இதற்​கிடையே சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஜெம் வீரமணி மற்​றும் சாந்​தி, மகேந்​திர சிம்​மன் ஆகியோரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழ் கைது செய்​யும் நடவடிக்​கைளைச் சிறப்​பு புல​னாய்​வுக் குழு​வினர் தீவிரப்​படுத்தி உள்​ளனர்.

அதோடு, வீரமணி மீது பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் தொடர்ந்து புகார் அளித்​து வருகின்றனர். அவர்​களிடம் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வினர் ரகசிய வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதனால், இந்த வழக்​கு மேலும்​ பெரி​தாகி வருகிறது.

<div class="paragraphs"><p>கீதாஞ்சலி,கீதா</p></div>
ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in