பெண்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்பு: ‘வெற்றி’ திட்டத்தில் ரூ.5 கோடி வரை நிதியுதவி

பெண்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்பு: ‘வெற்றி’ திட்டத்தில் ரூ.5 கோடி வரை நிதியுதவி
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள வெற்றி மகளிர் தொழில்​முனை​வோர் மேம்​பாட்​டுத் திட்​ட வழி​காட்டு நெறி​முறை​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமி​ழ​கத்​தில் மகளிர் மேம்​பாட்டை ஊக்​குவிக்​கும் வகை​யில் ‘வெற்றி மகளிர் தொழில்​முனை​வோர் மேம்​பாட்​டுத் திட்​டம்’ என்ற நிதியுத​வித் திட்​டதை அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

இத்​திட்​டத்​தின் சிறப்​பம்​ச​மாக, அனைத்து சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் தொகு​திக்கு 10 மகளிர் தொழில்​முனை​வோர் வீதம் தேர்வு செய்​யப்பட உள்​ளனர். அந்​தந்த தொகுதி எம்​எல்​ஏ.க்​கள் மூலம் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள், தகு​தி​யின் அடிப்​படை​யில் தொழில் முதலீட்​டுக் கழகத்​தால் பரிசீலிக்​கப்​பட்டு தேர்வு செய்​யப்​படு​வர்.

இந்த கடனுத​வியை நிலம் வாங்​குதல், கட்​டிடம் கட்​டு​தல், புதிய இயந்​திரங்​கள் மற்​றும் உபகரணங்​களை வாங்​குதல் உள்​ளிட்ட தேவை​களுக்​குப் பயன்​படுத்​தலாம். இத்​திட்​டத்​தின் கீழ் ரூ.10 லட்​சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடி​யும்.

இதற்​கான வட்டி விகிதம் தற்​போது ஆண்​டுக்கு 9.95 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. முதல்​முறை​யாக தொழில்​முனை​வோ​ருக்​கு சிறப்​புத் தொழிற்​ப​யிற்​சி​யும் வழங்​கப்படும். கடன் தொகை​யைத் திருப்​பிச் செலுத்த அதி​கபட்​ச​மாக 9 ஆண்​டு​கள் அவகாசம் வழங்​கப்​படு​ம். தொழில் தொடங்​கும் ஆரம்​பகட்ட சிரமங்​களை கருத்​தில் கொண்​டு, இதில் 2 ஆண்​டு​கள் வரை தவணை ஒத்​திவைப்பு கால​மும் அடங்​கும். கடனை மாதாந்​திர தவணை முறை​யில் திருப்​பிச் செலுத்த வேண்​டும். இத்​திட்​டத்​தில் தனி​நபர் சிபில் ஸ்கோர் 600-க்​கும் அதி​க​மாக இருக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

பெண்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்பு: ‘வெற்றி’ திட்டத்தில் ரூ.5 கோடி வரை நிதியுதவி
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் 3-வது நாளாகத் தொடர் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in