தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் முழு பின்னணி

சாத்தான்குளத்தில்  ஜெயராஜ், பென்னிக்ஸ் படத்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் படத்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகிய இரு​வரும், சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பெருந்தொற்று காரண​மாக ஊரடங்கு உத்​தரவு அமல்​ படுத்​தப்​பட்​டிருந்​தது.

ஊரடங்கு உத்​தரவை மீறி கடையை திறந்து வைத்​த​தாகக் கூறி ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் ஆகிய இரு​வரை​யும் 2020 ஜூன் 19-ம் தேதி விசா​ரணைக்​காக சாத்​தான்​குளம் காவல் நிலை​யத்​துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர்.

போலீ​ஸாரை பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​த​தாக இரு​வர் மீதும் மறுநாள் வழக்கு பதிவு செய்​து, சாத்​தான்​குளம் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி கோவில்​பட்டி கிளைச் சிறை​யில் அடைத்​தனர்.

போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கிய​தில் காயமடைந்த பென்​னிக்ஸ் ஜூன் 22-ம் தேதி இரவிலும், ஜெய​ராஜ் 23-ம் தேதி அதி​காலை​யிலும் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவம் தமிழகம் மட்​டுமின்றி நாட்​டையே உலுக்​கியது. இந்தச் சம்​பவத்தை காவல் துறை​யினர் மறைக்க முயற்சி மேற்​கொண்டனர். ஆனால், சாத்​தான் குளத்​தில் பொது​மக்​கள் சாலை மறியல் உள்​ளிட்ட தொடர் போராட்​டங்​களை நடத்​தினர்.

மதுரை உயர் நீதி​மன்ற கிளை ஜூன் 24-ம் தேதி தானாக முன்​வந்து இந்த வழக்கை விசா​ரணைக்கு எடுத்​து, அடுத்​தடுத்த பல உத்​தர​வு​களை பிறப்​பித்​தது. இரு​வரை​யும் காவல் துறை​யினர் மிகக் கொடூர​மாகத் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தது பல்​வேறு ஆதா​ரங்​கள் மூலம் தெரிய​வந்​தது.

2020 ஜூன் 25-ம் தேதி இரு​வரது உடல்​களும் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்டு இறு​திச்​சடங்​கு​கள் நடத்​தப்​பட்​டன. பொது​மக்​களின் தொடர் போராட்​டம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் தலை​யீடு காரண​மாக, இந்​தச் சம்​பவம் தொடர்​பாக சாத்​தான்​குளம் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு ​கணேஷ், சிறப்பு உதவி ஆய்​வாளர் பால்​துரை, தலைமை காவலர் முரு​கன், காவலர்​கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​ஸிஸ், வெயில் முத்து ஆகிய 10 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​கள் மீது கொலை உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. 10 பேரும் உடனடி​யாக பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை முதலில் உள்​ளூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​திய நிலை​யில், உயர் நீதிமன்ற உத்​தர​வின்​ பேரில், சிபிசிஐடி விசாரணைக்கும் பின்​னர், சிபிஐ விசா​ரணைக்கும் மாற்​றப்​பட்​டு, மதுரை​யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக விசா​ரணை நடை​பெற்​று வந்தது. இந்த வழக்கு விசா​ரணை காலத்​திலேயே, பால்​துரை உயி​ரிழந்தார்.

இதையடுத்து, மீத​முள்ள 9 பேர் மீதான விசா​ரணை நடை​பெற்று வந்த நிலை​யில், அனைவரும் குற்​ற​வாளி​கள் என கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக நேற்று தூக்கு தண்​டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்​தச் சம்​பவம் தொடர்​பாக தேசிய மனித உரிமை ஆணை​ய​மும் விசா​ரணை நடத்​தி​யது.

அம்​னிஸ்டி இன்​டர்​நேஷனல், ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்​வ​தேச மனித உரிமை அமைப்​பு​கள் இந்த சம்​பவத்தை சர்​வ​தேச கவனத்​துக்கு கொண்டு வந்​தன. ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில் ரூ.10 லட்​சம் நிதி மற்​றும் ஜெய​ராஜின் மகளுக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டது.

தமிழகத்​தில் உள்ள அனைத்து கட்​சித் தலை​வர்​களும் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறியதுடன், நிதி உதவி​களை​யும் வழங்​கினர். இந்த பகு​தி​யில் சுற்​றுப்​பயணம் செய்த ராகுல் காந்​தி​யும், இக்​குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக​வின் முக்​கிய பிரச்​சார பொருளாக இந்த விவகாரம் இருந்தது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் 9 பேருக்​கும் தூக்கு தண்​டனை விதித்து நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு நாடு முழு​வதும் பெரும் வரவேற்பை பெற்​றுள்​ளது. மேலும், இந்த தீர்ப்பை சாத்​தான்​குளம் மக்​கள் மட்​டுமல்ல, ஒட்​டு மொத்த தமிழக மக்​களும் வரவேற்​றுள்​ளனர்​. சாத்​தான்​குளத்​தில்​ ஆட்​டோ ஓட்​டுநர்​கள் உள்பட​ என அனைத்துத் தரப்புமக்களும் நேற்​று மாலை இனிப்​பு வழங்​கி கொண்​டாடினர்​.

<div class="paragraphs"><p>சாத்தான்குளத்தில்  ஜெயராஜ், பென்னிக்ஸ் படத்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p></div>
ஜோதிட நாள்காட்டி 01.04.2026 | பங்குனி 18 - புதன்கிழமை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in