அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து மீண்டும் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் வாபஸ்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து மீண்டும் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் வாபஸ்
Updated on
1 min read

சென்னை: அதிமுக எம்​எல்​ஏக்​கள் 6 பேர்தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இதை எதிர்த்து அதி​முக கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்தி தாக்​கல் செய்த வழக்​கில், வழக்​கறிஞர்​கள் வாதம் தொடங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், 6 அதி​முக எம்​எல்​ஏ ராஜி​னா​மாவை சட்​டப்​பேரவை தலை​வர் ஏற்​றதை எதிர்த்து மதுரையை சேர்ந்த பி.ஜி.சந்​திரசேகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்​கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி தலைமையிலான அமர்வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, “ஒரே விவ​காரத்​தில் ஏன் அடுத்​தடுத்து வழக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன.

நிலுவை வழக்கை நீர்த்​துப்​போக செய்​யும் வகை​யில் ஏன் மீண்டும் வழக்​கு​ தொடர வேண்​டும்?” என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர்.

இதையடுத்து, வழக்கை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்ய உள்​ள​தாக நீதிப​தி​கள் எச்​சரித்​ததை அடுத்​து, மனுவை திரும்​பப் பெறுவதாக மனு​தா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து மீண்டும் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் வாபஸ்
மிலாடி நபி: நாளை மதுக்கடைகள் மூடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in