சென்னையில் ஆக.6 மற்றும் 20-ல் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆக.6, 20 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவு செய்வது எப்படி?

சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஆகஸ்ட் 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை மேற்கு மாம்பலத்தில் இலவச முழுமையான கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது.

இதில் பங்கேற்க 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள், காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 97104 85295 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

என்னென்ன பரிசோதனைகள்?

இந்த பரிசோதனையில் பார்வைத் திறன் மதிப்பீடு, கண்ணாடி பவர் பரிசோதனை (ரிஃப்ராக்ஷன்), கண்புரை (Cataract) பரிசோதனை, கண் அழுத்த நோய் (Glaucoma) பரிசோதனை, கண் உள் அழுத்தம் (IOP) அளவீடு, கண்ணின் முன்பகுதி பரிசோதனை, விழித்திரை (Retina) பரிசோதனை, உலர் கண் (Dry Eye) மதிப்பீடு ஆகியவை மேற்கொள்ளப்படும். தேவையெனில் மேம்பட்ட சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக நிபுணர் ஆலோசனை மற்றும் உரிய பரிந்துரையும் வழங்கப்படும்.

“இம்முயற்சியின் நோக்கம் கண் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பைத் தடுத்து, மூத்த குடிமக்கள் நல்ல பார்வையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுவதே,” என்று ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் இயக்குநர் அ.மகாலிங்கம் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in