அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

கோடிக்கணக்கில் பணம் சிக்கியதாக தகவல்
போலீஸார் சோதனை நடத்திய சண்முகபிரியாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பெருங்குடியில் உள்ள குடியிருப்பு. | சண்முகபிரியா

போலீஸார் சோதனை நடத்திய சண்முகபிரியாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பெருங்குடியில் உள்ள குடியிருப்பு. | சண்முகபிரியா

Updated on: 
2 min read

சென்னை: தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய தோழியும், துணிக்​கடை அதிபரு​மான சண்​முகபி​ரியா என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, கோடிக் கணக்​கில் பணம் மற்​றும் பணப்​பரிவர்​தனை தொடர்​பான முக்கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள பல்​வேறு தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் மற்​றும் அரசு அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாகப் எழுந்த புகார்​கள் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதன்​பேரில் கடந்த 26-ம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்​பில் மகேஸ் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

மேலும், தனியார் பள்ளி நிர்​வாகங்​களிடம் பணம் வசூலித்​த​தாகக் கூறப்​படும் முன்​னாள் நிர்​வாகி​கள் மற்​றும் தலைமறைவாக உள்ள முத்​துக்​குமார் உள்​ளிட்​டோரின் தொடர்​பு​கள் குறித்​தும் விசா​ரணை விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்​துக்​குமார் மூலம் துணிக்​கடை அதிபர் சண்​முகபி​ரியா என்​பவருக்கு பணப்​பரிவர்த்​தனை நடந்​துள்​ள​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்டு குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது. தொடர்ந்து, சண்​முகப்​பி​ரியா​வுக்கு சொந்​த​மான நீலாங்​கரை வீட்​டில் ஏற்​கெனவே சோதனை நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், பெருங்​குடி​யில் உள்ள அவரது வீட்​டில் வேறு நபர்​கள் வசித்து வரு​வ​தால், அங்கு முக்​கிய ஆவணங்​கள் ஏதேனும் கிடைக்​குமா என்ற கோணத்​தில் நேற்று மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். பல மணி நேரம் நடை​பெற்ற இந்த சோதனை​யில், அங்​கிருந்து கோடிக்​கணக்​கில் பணம் மற்​றும் வங்​கிப் பணம் பரிவர்த்​தனை ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. ஆனால், இதை போலீ​ஸார் உறுதிப்​படுத்​த​வில்லை.

இருப்​பினும், பெண் தொழில் அதிபர் சண்​முகப்​பி​ரியா தொடர்​புடைய இடங்​களில் நடை​பெற்ற சோதனை வழக்​கின் அடுத்​தகட்ட நகர்​வுக்​கான முக்​கிய அம்​ச​மாக விசா​ரணை அதி​காரி​கள் நம்​பு​கின்​றனர். இதையடுத்து, அடுத்​தடுத்து மேலும் சிலர் கைது செய்​யப்​படுவதோடு, சந்​தேகத்​துக்​கிட​மான பல இடங்​களில் விரைவில் சோதனை நடத்​தப்​பட உள்​ள​தாக மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

சண்​முகப்​பி​ரியா​வுக்​கும் அன்​பில் மகேஸுக்​கும் உள்ள வணிக மற்​றும் தனிப்​பட்ட தொடர்​பு​கள் என்ன என்​பதை மைய​மாக வைத்தே விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. வசூலிக்​கப்​பட்ட நிதி, ஜவுளி வியாபாரம் போன்ற பிற வணிக வழிகளில் கைமாறியதா அல்​லது முதலீடு செய்​யப்​பட்​டதா என்ற கோணத்​தில் விசா​ரிக்​கப்​படு​கிறது. இதற்​கிடை​யில், தன்​மீதான குற்​றச்​சாட்​டுகளை சண்​முகப்​பி​ரியா போலீ​ஸாரிடம் தொடர்ந்து மறுத்து வரு​கிறார்.

காவலில் எடுக்க மனு

இதற்கிடையே புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள அன்​பில் மகேஸ் தரப்​பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலை​யில் ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதே வேளையில், அவரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதில் கூறியுள்​ள​தாவது:

கும்​பகோணம் தீ விபத்து சம்​பவத்​துக்​குப் பிறகு எந்த தனியார் பள்​ளிக்​கும் நிரந்​தர அங்​கீகாரம் வழங்​கப்​படுவது இல்லை. ஆனால், கட்சி நிதி என்று கூறி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்​துள்​ளனர். இந்த வழக்​கில் தலைமறைவாக உள்ள முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரும், அன்​பில் மகேஸும் நண்​பர்​கள், ஒன்​றாகப் படித்​தவர்​கள். அவர்​கள் இரு​வருக்​கும் இடை​யி​லான நிதி பரிவர்த்​தனை தொடர்​பு​கள், யார் யாரிடம் எவ்​வளவு பணம் பெறப்​பட்​டுள்​ளது, வேறு யார், யாருக்கு இதில் தொடர்பு உள்​ளது. யார், யார் இதில் இடைத் தரகர்​களாக செயல்​பட்​டுள்​ளனர், வேறு பணப் பரிமாற்​றங்​கள் குறித்​தும் அன்​பில் மகேஸிடம் விரிவாக விசா​ரணை நடத்த வேண்டி இருப்​ப​தால் அவரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்​வாறு அதில் கோரப்​பட்​டுள்​ளது.

அன்​பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி முன்பு விசா​ரணைக்கு வர உள்ள நிலை​யில், அவரை காவலில் எடுத்து விசா​ரிக்​கக் கோரிய மனு குறித்து காவல்​துறை தரப்​பில் முறை​யிடப்​படும் என தெரி​கிறது.

இதற்​கிடையே, பள்ளி நிர்​வாகி​களிடம் மோசடி செய்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் சங்​கப் பொருளாள​ரும், முன்​னாள் எம்​எல்​ஏவுமான முத்​துக்​குமாரின் முன்​ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

<div class="paragraphs"><p>போலீஸார் சோதனை நடத்திய சண்முகபிரியாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பெருங்குடியில் உள்ள குடியிருப்பு. |&nbsp;சண்முகபிரியா</p></div>
Samsung Galaxy A08 போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in