

வந்தே மாதரம் பாடல் என்பது தேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இப்பாடல் தேசத்தின் வலிமையை ஆங்கிலேயருக்கு தெரிவிக்கிறது என்று எஸ்ஆர்எம் கல்லூரியின் தமிழ் பேராயத்தின் முப்பெரும் விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ் பேராயம் சார்பில் பாரிவேந் தர் தமிழ் அறக்கட்டளைகள் தொடக்க விழா, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு 150-வது ஆண்டு விழா, மாவீரர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. எஸ்ஆர்எம் நிறுவன தலைவர் பாரிவேந் தர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
தமிழ் பேராயர் தலைவர் கரு.நாகராஜன், சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் பாஜக தேசிய செயற்குழு உறுப் பினருமான அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், மேடையில் அமைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்துக்கு மாலை அணிவித்து, பாரிவேந்தர் அறக் கட்டளை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, இளங் கோவடிகள், கம்பர், திருவள் ளுவர், வள்ளலார், பாரதியார் ஆகியோர் பெயர்களில் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல் கலைக்கழகத்தின் மாணவர்கள் சார்பில் கடந்த மாதம். சாதனைக்காக வந்தே மாதரம் பாடலை பாடியதற்கான லிம்கா புத்தக சான்று வழங்கப்பட்டது.
விழாவில், அண்ணாமலை பேசுகையில், ''வந்தே மாதரம் பாடல் என்பது தேச மக்களை ஒன்றிணைக்கும் விதமாக அமைந்துள்ளது.இப்பாடல் தேசத்தின் வலிமையை ஆங்கிலேயருக்கு தெரிவிக்கிறது. இந்த பாடலை முழுமையாக பாடுவதற்கு, அப்போது இருந்த பிரதமர் நேரு ஒப்பு கொள்ளவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளடக்கிய நம் நாட்டில் இதுபோன்ற பாடல்களை இசைக்க கூடாது என்று அப்போது பாடலை பாட அவர் ஒப்புக்கொள்ளவில்லை" என்றார்.