அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்க முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல்

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

Updated on: 
1 min read

சென்னை: ‘அனைத்து சாதி​யினருக்​கும் உடனடி​யாக அர்ச்​சகர் பணி நியமனம் வழங்க வேண்​டும்’ என உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அரிபரந்​தாமன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த 2006-ல் பிறப்​பிக்​கப்​பட்ட அனைத்து சாதி​யினரும் அர்ச்​சக​ராகும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்​கில், 2015-ல் உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்யவில்​லை. தகு​தி​யும் பயிற்​சி​யும் பெற்ற இந்​துக்கள் அனைவரும் அர்ச்​சக​ராகலாம் என்​பதை உறுதி செய்​தது. தொடர்ந்​து, கடந்த 2020-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் வெளியிடப்பட்ட புதிய இந்து சமய அறநிலை​யத் ​துறை சேவை விதி​களின்​படி, 2021-ல் திமுக அரசு 28 பேரை அர்ச்​சக​ராக நியமித்தது.

அதைத்​தொடர்ந்​து, சேவை விதி​களை எதிர்த்த வழக்​கில், ஆகமக் கோயில்​களைப் பிரித்​தறிய 2022-ம் ஆண்டு உயர் நீதி​மன்​றமே 5 நபர் குழு அமைத்​த​போது தமிழக அரசு அதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யாமல் வேடிக்கை பார்த்​தது. மேலும், அக்​குழுவில் அரசு பரிந்​துரைத்த சைவப் பேராசிரியர் சத்​தி​ய​வேல் முருகனாருக்கு மனு​தா​ரர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​போது, அரசு தரப்பு எவ்​வித எதிர்ப்​பும் இன்றி அவரை நீக்க ஒப்​புக்​கொண்​டது வெட்​கக்​கே​டானது.

ஆகமத்தை விட அரசி​யலமைப்பே மேலானது என்​ப​தால், அரசு பயிற்சி பெற்ற அனைத்து சாதி​யினருக்​கும் உடனடி​யாகப் அர்ச்சகருக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்​டும். தேவைப்​பட்​டால் சட்​டப்பேரவை​யில் புதிய சட்​டம் இயற்றி உச்ச நீதி​மன்​றத்​தில் உறு​தி​யோடு வா​தாட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்ளார்​.

<div class="paragraphs"><p>முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்</p></div>
மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in