மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
Updated on: 
1 min read

ஆம்பூர்: பள்ளி மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாருக்கு இடையே பொதுவழி பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த உமராபாத் போலீஸார், இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு, தகராறு தொடர்பாக பள்ளி மாணவர் ஒருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த மாணவரின் தாயார் காவல் நிலையம் சென்று பொதுவழித் தகராறில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே, அவரை விடுவிக்க வேண்டும் என கோரினார்.

அப்போது, மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவிட்டார். விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் ரூ.10 ஆயிரம் கேட்டது உண்மை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட மதியழகனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in