

மதுரை: திருப்பரங்குன்றம் ஒன்றிய திமுக செயலாளராக இருந்தவர் கார்த்திகேயன். இவர் விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார்.
அவர் கூறும்போது, “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை திமுக அரசு நிறை வேற்றாததால் மன உளைச்சலில் இருந்தேன்” என்றார்.
2014-ல் திமுக ஒன்றியச் செயலாளராக இருந்த கார்த்திகேயன், பின்னர் உட்கட்சித் தேர்தலில் ஒன்றிய செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், கட்சிப் பணிகளில் இருந்து விலகிஇருந்தது குறிப்பிடத்தக்கது.