முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி!

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி!
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளருமான ஆர். சின்னசாமி திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (03-12-2025) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளருமான ஆர். சின்னசாமி திமுகவில் இணைந்தார்.

அதுபோது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மேற்கு மண்டலப் பொறுப்பாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி!
“நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை” - தமிழக அரசை சாடிய விஜய்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in