“நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை” - தமிழக அரசை சாடிய விஜய்!

“நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை” - தமிழக அரசை சாடிய விஜய்!
Updated on
1 min read

சென்னை: மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல் எதிரொலியாக, சென்னை, ராணிப்பேட்டை திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.

மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை” - தமிழக அரசை சாடிய விஜய்!
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in