கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்

கவனம் ஈர்த்த நாதக வேட்பாளரின் ஊர்வலம்!
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்
Updated on
2 min read

கரூர்: கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்டிஏ கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக ஆதரவாளர்களுடன், ஊர்வலமாக வருகை வந்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக சார்பில் தியாகராஜன் போட்டியிடுகின்றனர். கரூரில் பலமுறை வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட வேட்புமனு நிலவரம்:

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இன்று 9 நபர்கள் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் விவரம்:

1. ஜெ.மாதவன்

2. பொ.செல்வகுமார்

3. த.சரவணன்

4. பா.காஜா மொய்தீன்

5. சீ.செந்தில்குமார்

6. பா.சம்பத்குமார்

7. ச.இம்ரான் கான்

8. கா.வீரமலை

9. த.முருகானந்தம்

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 3 மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களது விவரம்:

1. மு.ராஜகுரு

2. வை.சத்யா

3. சு.கீதா

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் விவரம்

1. நரேன்

2. சக்திவேல்

கவனம் ஈர்த்த நாதக வேட்பாளரின் ஊர்வலம்! நாதக கரூர் வேட்பாளர் ரெ.கருப்பையா மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் வந்து பேருந்து நிலைய காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து 2 கிமீ தூரம் வரை சீர் வரிசைத் தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக சீர்வரிசைத் தட்டுகளை நாதகவினர் சாலையில் பரப்பினர். ஒரு பக்கம் நாதக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிலை என்று வேளாண் விளை பொருட்களும், நெசவுப் பொருட்களும், இன்னொருபுறம் திராவிட ஆட்சியில் என்ற பதாகையின் கீழ் ஒரு தாம்பாளத் தட்டில் ஜல்லிக் கல், ஒன்றில் ஆற்று மணல், இன்னொன்றில் மது பாட்டில்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் வேட்பாளர் அங்கிருந்து அனுமதிக்கப்பட்ட 5 பேருடன் புறப்பட்டுச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாதாக் ஊர்வலமும், சீர் வரிசையும் கவனம் ஈர்த்தது.

கரூர் தொகுதியில் இன்று மட்டும் 14 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்
காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in