தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு
Updated on
1 min read

சென்னை: அ​தி​முக​வில் இருந்து விலகி தவெக​வில் இணைந்த முன்​னாள் அமைச்​சர்​களுக்கு பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தவெக தலைமை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்​தும் வித​மாக புதிய மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர்​கள் மற்​றும் துணை பொதுச் செய​லா​ளர்​கள் நியமனம் செய்​யப்​படு​கின்​றனர்.

அதன்​படி, புதுக்​கோட்டை மாவட்ட அமைப்​புச்செய​லா​ள​ராக சி.​விஜய​பாஸ்​கர், கரூர் மாவட்ட அமைப்​புச்செய​லா​ள​ராக எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், தென்​காசி மாவட்ட அமைப்​புச் செய​லா​ள​ராக இசக்கி சுப்​பையா ஆகியோர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதேபோல், துணை பொதுச்​செய​லா​ளர்​களாக எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், மரகதம் குமர​வேல், ராஜகோ​பால், எச்​.ஜாகீர் உசேன், வி.கு​மார், எஸ்​.​யுவ​ராஜ், சி.​வி.​தினகரன், கே.மணி​கண்​டன், ஆர்​.எஸ்.மணி​கண்​டன், கே.அருள்​ராஜ், எஸ்​.டி.ஆர். சாமுவேல் ராஜ் ஆகியோர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in