

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று தவெகவில் இணைந்தனர்.
இவர்களுடன் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரனும் தவெகவில் இணைந்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எதிர்கால பொதுவாழ்க்கை பயணத்தை முன்னிறுத்தி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடன் அதிமுகதிருச்சி மாநகர் மாவட்டப்பொருளாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.