59 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மதுரையில் போட்டியிடாத மார்க்சிஸ்ட் கட்சி

தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாத தோழர்கள்
59 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மதுரையில் போட்டியிடாத மார்க்சிஸ்ட் கட்சி
Updated on
1 min read

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரலாற்​றில் கடந்த 59 ஆண்​டு​களில் முதல் முறை​யாக மதுரை மாவட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கட்சி போட்​டி​யி​டாத​தால், அக்​கட்​சி​யினர் விரக்தி அடைந்​துள்​ளனர்.

மதுரை மாவட்​டத்​தில் மொத்​த​முள்ள 10 தொகு​தி​களில் இந்த முறை 7 தொகு​தி​கள் திமுக​வுக்​கும், மதுரை தெற்கு தொகுதி மதி​முக​வுக்​கும், உசிலம்​பட்​டி, மேலூர் தொகு​தி​கள் காங்​கிரஸ் கட்​சிக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

காங்​கிரஸ் கட்​சி​யினர் மதுரை மாவட்​டத்​தில் ஒரு தொகு​தி​யைத்​தான் கேட்​டனர். ஆனால், அவர்​களுக்கு 2 தொகு​தி​களை ஒதுக்கி உள்​ளனர். மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்​கப்​பட​வில்​லை. இதனால், மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் விரக்​தி​யடைந்து தேர்​தல் பணி​களில் ஆர்​வம் காட்​டா​மல் உள்​ளனர்.

இதுகுறித்து மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் கூறிய​தாவது: 1952, 1957, 1962 ஆகிய தேர்​தல்​களில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றது. 1964-ல் ஒருங்​கிணைந்த கம்​யூனிஸ்ட் கட்சி இரண்​டாக பிளவுபட்டு புதி​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் (மார்க்​சிஸ்ட்) உரு​வானது. பின்​னர் நடந்த 1967 தேர்​தல் முதல் 2021 வரை நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களி​லும் தனித்​தோ, கூட்​ட​ணி​யிலோ ஏதே​னும் ஒரு தொகு​தியி​லா​வது மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர்.

1967-ல் மதுரை கிழக்​கில் கே.பி.ஜானகி​யம்​மாளும், மதுரை மேற்​கில் என்​.சங்​கரய்​யா​வும் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​ற​னர். 1980-ல் அதி​முக​வுடன் கூட்​டணி வைத்து மதுரை கிழக்​கில் என்​.சங்​கரய்யா வெற்​றி​பெற்​றார்.

தொகுதி மறு​வரையறைக்கு முன்பு இருந்த மதுரை மேற்​கில் (தற்​போது வடக்​கு) என்​.சங்​கரய்யா ஒரு​முறை​யும், அதே​போல் அப்​போதைய மதுரை கிழக்​குத் தொகு​தி​யில் கே.பி.ஜானகி​யம்​மாள், என்​.சங்​கரய்​யா, என்​.நன்​மாறன் ஆகி​யோர் 5 முறை​யும் வெற்றி பெற்​றுள்​ளனர்.

தொகுதி மறு​வரையறைக்​குப் பின்பு 2011-ல் உரு​வான மதுரை தெற்​கில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் அண்​ணாதுரை ஒரு முறை வெற்றி பெற்​றுள்​ளார். 2021 தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் திருப்​பரங்​குன்​றம் தொகுதி ஒதுக்​கப்​பட்​டது. 2026 தேர்​தலில் மதுரை மாவட்​டத்​தில் ஒரு தொகுதி கூட ஒதுக்​கப்​ப​டாதது ஏமாற்​றமளிக்​கிறது. இவ்​​வாறு அவர்​கள் கூறினர்.

59 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மதுரையில் போட்டியிடாத மார்க்சிஸ்ட் கட்சி
“திரையில் பார்த்த விஜய்யை தெருவில் பார்க்க மக்கள் வந்துள்ளனர்” - பெ.சண்முகம் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in