மயிலாடுதுறை: கோழிகளை தொடர்ந்து காகம், கொக்கு உள்ளிட்ட பறவைகளும் உயிரிழப்பதால் அச்சம்

செம்பனார்கோவில் பகுதியில் உயிரிழந்து கிடக்கும் காகங்கள்.

செம்பனார்கோவில் பகுதியில் உயிரிழந்து கிடக்கும் காகங்கள்.

Updated on: 
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கோழிகளைத் தொடர்ந்து காகம், கொக்கு உள்ளிட்ட பறவை இனங்களும் உயிரிழப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தில், கடந்த வாரம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன.

இதையடுத்து, அப்பகுதியில் கால்நடைத் துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தியதுடன், உயிரிழந்த கோழிகளின் உடல்களை உடற்கூராய்வுக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு எதுவும் இல்லை, ஒருவகை வைரஸ் நோய் தாக்கத்தால் கோழிகள் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சித்தமல்லி, கஞ்சாநகரம், செம்பனார் கோவில், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பல்வேறு இடங்களில் சாலைகள், வீட்டுக்கூரைகள் மற்றும் தோட்டங்களில் ஆங்காங்கே காகங்கள் உயிரிழந்த நிலையில் கிடக்கின்றன.

மேலும் கொக்கு, வான்கோழி உள்ளிட்ட பறவை இனங்களும் ஆங்காங்கே திடீர் திடீரென உயிரிழப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது, “முடிகண்ட நல்லூர் கிராமத்தில் கோழிகள் உயிரிழந்ததற்கு வைரஸ் நோய் தாக்கமே காரணம் என்று கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது காகம், கொக்கு உள்ளிட்ட வயல்வெளிகளில் மேயக்கூடிய பறவை இனங்கள் திடீர், திடீரென்று ஆங்காங்கே உயிரிழந்து கிடக்கின்றன. இவை நோய் தாக்கத்தால் உயிரிழந்தனவா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை” என்றனர்.

இதுகுறித்து கால்நடைத் துறை இணை இயக்குநர் அன்பரசனிடம் கேட்டபோது, “உயிரிழந்த காகத்தின் உடலை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ப்ளூ காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

அல்லது, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட வயல்வெளிகளில் இரையை தின்றுகூட காகங்கள் இறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

<div class="paragraphs"><p>செம்பனார்கோவில் பகுதியில் உயிரிழந்து கிடக்கும் காகங்கள்.</p></div>
துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ஒப்பந்தம்

X