மதுரை, வேலூரை தொடர்ந்து மார்ச் 11-ல் பிரதமர் திருச்சி வருகை

மதுரை, வேலூரை தொடர்ந்து மார்ச் 11-ல் பிரதமர் திருச்சி வருகை

Published on

சென்னை: மதுரை, வேலூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி மார்ச் 11-ம் தேதி திருச்​சி​யில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கிறார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, தேஜகூ சார்​பில் பிரம்​மாண்​டப் பொதுக்​கூட்​டங்​கள் நடந்து வரு​கின்​றன. மேலும், பிரதமர் மோடி அடுத்த மாதம் 3 முறை தமிழகத்​தில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

வரும் மார்ச் 1-ல் மதுரை​யில் நடை​பெறும் பிரம்​மாண்​ட​மான பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் பங்​கேற்​கிறார். இக்​கூட்​டத்​தில் தேஜகூ தலை​வர்​களு​டன், புதி​தாக இணை​ய​வுள்ள கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​பார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தொடர்ந்​து, மதுரை​யில் எய்ம்ஸ் மருத்​து​வக் கல்​லூரியை பிரதமர் தொடங்​கிவைக்​கிறார். பின்​னர், திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லில் சுவாமி தரிசனம் மேற்​கொள்​கிறார்.

திருப்​பரங்​குன்​றத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வது தொடர்​பான விவ​காரம் நாடு முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​திய நிலை​யில், பிரதமர் மோடி திருப்​பரங்​குன்​றத்​தில் சுவாமி தரிசனம் செய்​ய​வுள்​ளது பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மதுரையைத் தொடர்ந்து மார்ச் 7-ம் தேதி வேலூரில் நடை​பெறும் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பிரதமர் உரை​யாற்​றுகிறார்.

பின்​னர், மார்ச் 11-ல் திருச்​சி​யில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்​றுகிறார்.பிரதமரின் பயணங்​களை ஒருங்​கிணைக்க, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தலை​மை​யில் மாநில அளவி​லான சிறப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

மதுரை, வேலூரை தொடர்ந்து மார்ச் 11-ல் பிரதமர் திருச்சி வருகை
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்: வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் வழிபாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in