சென்னை, திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை சென்னை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் பிப்.14-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் நாளை (பிப்.9) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பிப்.10 முதல் 12-ம் தேதி வரை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பிப்.12-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு!
தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க இபிஎஸ் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in