வேலூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம்!

வேலூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம்!
Updated on
1 min read

சென்னை: வேலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும் (ஜன.30), நாளை மறுதினமும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டமும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

பிப்.1-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 2, 3 தேதிகளில் தென் தமிழகத்திலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம்!
இந்திய அணித்தேர்வில் புறக்கணிப்பு: சர்பராஸ் கானின் விவேகம் நிரம்பிய பதில்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in