சென்னையில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, புனே செல்லும் விமானங்கள் தாமதம்: விடிய விடிய காத்திருந்த பயணிகள்

சென்னையில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, புனே செல்லும் விமானங்கள் தாமதம்: விடிய விடிய காத்திருந்த பயணிகள்
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் இருந்து கொல்​கத்​தாவுக்கு நேற்​று​ முன்​தினம் இரவு 7.40 மணிக்கு ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் பயணி​கள் விமானம் புறப்பட வேண்​டும். அந்த விமானத்​தில் பயணம் செய்ய 148 பயணி​கள் காத்​திருந்​தனர்.

அப்​போது, விமானம் கால​தாமத​மாக புறப்​படும் என்று அறிவிக்கப்​பட்​டது. அதற்​கான காரணத்தை விமான நிறு​வனம் தெரிவிக்​க​வில்​லை. விடிய விடிய விமான நிலை​யத்​திலேயே பயணி​கள் காத்​திருந்​தனர்.

30-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் தங்​கள் பயணத்தை ரத்து செய்​து​விட்​டு, வீடு​களுக்கு சென்​றனர். பின்​னர், விமானம் 8 மணி நேரம் தாமத​மாக நேற்று அதி​காலை 4 மணிக்கு கொல்​கத்தா புறப்​பட்டு சென்​றது.

அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்​று​ முன்​தினம் இரவு 9.25 மணிக்கு 120 பயணி​களு​டன் பெங்​களூருக்கு புறப்பட வேண்​டிய ஏர் இந்தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் இரவு 11 மணிக்கு புறப்​பட்​டது.

சென்​னை​யில் இருந்து நேற்​று​ முன் தினம் இரவு 10.05 மணிக்கு 167 பயணி​களு​டன் புனே புறப்பட வேண்​டிய ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் நள்​ளிரவு 12 மணிக்கு புறப்​பட்டு சென்​றது.

ஒரே நாள் இரவில் அடுத்​தடுத்து 3 ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானங்​கள் தாமதம் ஆனதால், நூற்​றுக்​கணக்​கான பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர்.

அவர்கள் அதிகாரிகளுடன் வாக்​கு​வாதங்​களில் ஈடு​பட்​ட​னர். இதுகுறித்​து, சென்னை விமான நிலைய அதி​காரி​கள் கூறுகை​யில், “சென்​னைக்கு வரவேண்​டிய விமானங்​கள் தாமத​மாக வந்​த​தால், இங்கிருந்து புறப்பட வேண்​டிய வி​மானங்​களும் தாமத​மாக புறப்​பட்டன” என்​று தெரி​வித்​தனர்​.

சென்னையில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, புனே செல்லும் விமானங்கள் தாமதம்: விடிய விடிய காத்திருந்த பயணிகள்
சென்னை டிஆர்ஐ அலுவலக காவலாளியை கட்டிப்போட்டு கார் கண்ணாடியை உடைத்து ஆவணங்கள் கொள்ளை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in