

சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவின் விவரம்: திருச்சி ஆயுதப்படை டிஐஜி எம்.விஜயலட்சுமி இப்போது சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாகவும், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத் இப்போது தூத்துக்குடி எஸ்.பி.யாகவும், அங்கிருந்த எஸ்.பி. அபிஷேக் குப்தா இப்போது சிவகங்கை எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய மண்டல சிபிசிஐடி எஸ்.பி. சண்முகபிரியா இப்போது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும், ராமேசுவரம் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.மீரா இப்போது சென்னை தலைமையிட செயலாக்கம் மற்றும் கணினி மயமாக்கல் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.