பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள்: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள்: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்தல் அறிக்​கை​யில் பட்​டியல் மாற்​றம் முதல் கச்​சத்​தீவு வரை இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் கோரிக்​கைகள் குறித்து அரசி​யல் கட்​சிகளுக்​கு, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

சட்​டப்​பேரவை தேர்​தலில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் குறித்த ஆய்​வறிக்​கை​யை, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்​பு, திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சி​யினரை சந்​தித்து நேற்று அளித்​தனர்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் என்​பது வெறும் பொருளா​தார சலுகைகளாக மட்​டுமல்​லாமல், வாழ்​வுரிமை மற்​றும் எல்லை பாது​காப்பு சார்ந்​தது.

பாக் ஜலசந்தி பகு​தி​யில் நில​வும் எல்லை மீறி மீன் பிடித்​தல் தொடர்​பான மோதல் தான் மீனவர்​கள் எதிர்​கொள்​ளும் மிக முக்​கிய​மான பிரச்​சினை. எனவே, கச்​சத்​தீவை மீட்​ப​தற்​கான சட்​டப் போராட்​டத்தை முன்​னெடுப்​ப​தற்​கான வாக்​குறு​தி, தேர்தல் அறிக்​கை​யில் முக்​கிய​மாக இடம் பெற்​றிருக்க வேண்​டும்.

மீனவர்கள் கைது நடவடிக்கை

எல்லை தாண்​டும் மீனவர்​கள் மீதான கைது நடவடிக்​கைகளை தவிர்த்​து, மனி​தாபி​மான முறை​யில் திருப்பி அனுப்​ப​வும், அவர் மீதான அபராதத்தை ரத்து செய்​ய​வும் தூதரக ரீதி​யான அழுத்​தம் கொடுக்க வேண்​டும். இரு நாட்டு மீனவர்​களுக்​கும் இடையி​லான பேச்​சு​வார்த்​தைகளை ஆண்​டுக்கு இரு​முறை நடத்த வேண்​டும்.

உயர் பதவி​களான ஐஏஸ், ஐபிஎஸ், நீதித்​துறை போன்ற இடங்​களில் மீனவர் சமூகத்தை சேர்ந்​தவர்​களின் எண்​ணிக்கை மிகக்​குறைந்த அளவில் உள்​ள​தால் மீனவர்​களை பிற்​படுத்​தப்​பட்​டோர் (எம்​பிசி) பட்​டியலில் இருந்து பழங்​குடி​யினர் பட்​டியலில் சேர்க்க மத்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும்.

கடலோர பகு​தி​களில் உள்ள அனைத்து மீனவ குடி​யிருப்​பு​களுக்கு 100 நாட்​களில் பட்டா வழங்​கும் சிறப்பு திட்​டத்தை ஏற்​படுத்த வேண்​டும். சிங்​கார​வேலர் வீடு​கட்​டும் திட்​டத்தை மீண்​டும் செயல்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும்.

மீன் பிடித்​தலின் போது உயி​ரிழக்​கும் மீனவர்​களுக்கு ரூ.25 லட்​சம் காப்​பீடு, டீசல் மானிய அளவை 3 ஆயிரம் லிட்​ட​ராக உயர்த்​துதல், ஆழ்​கடல் மீன்​பிடி படகு​களுக்​கான மானி​யத் தொகை​யாக ரூ.1 கோடி வழங்​குதல், அரசே படகு கட்​டும் தளங்​களை அமைத்​தல், மீன்​பிடி தடைக்​கால நிவாரணத்தை நாளொன்றுக்கு ரூ.500 வீதம் என ரூ.30,500 ஆக உயர்த்தி வழங்​குதல், காசிமேடு போன்ற முக்​கிய துறை​முகங்​களுக்கு அரு​கில் மீன்​களை பதப்​படுத்த மீன் பூங்​காக்​கள் மற்​றும் நவீன செய​லாக்க ஆலைகளை அமைத்​தல் போன்ற மீனவர்​களின் கோரிக்​கைகளை அரசி​யல் கட்​சிகள் தங்​களது தேர்தல் அறிக்​கை​யில் முதன்​மைப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள்: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சென்னை | சீரியல் நடிகை உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in