

சென்னை: விருகம்பாக்கத்தில் 31 வயதுடைய டிவி சீரியல் நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வசிக்கிறார். மேலும், இவர் தனியார் வங்கி தலைவரின் பாதுகாவலராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகை வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், முன்னாள் ராணுவ வீரர் தவறான கண்டோட்டத்தில் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து, நடிகை வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த முன்னாள் ராணுவ வீரர் ஜன்னல் கதவை திறந்து எட்டிப்பார்த்துள்ளார்.
மேலும், வீடியோ எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் சம்பந்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.