இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த மத்திய மீன்வளத் துறை செயலரிடம் கோரிக்கை

மத்திய மீன்வளத் துறை செயலாளர் அபிலாக்‌ஷ் லிக்கியிடம் கோரிக்கை மனு அளித்த தேசிய  பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பின் தலைவர் நல்லதம்பி

மத்திய மீன்வளத் துறை செயலாளர் அபிலாக்‌ஷ் லிக்கியிடம் கோரிக்கை மனு அளித்த தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பின் தலைவர் நல்லதம்பி

Updated on: 
1 min read

ராமேசுவரம்: மத்திய மீன்வளத் துறை செயலாளர் அபிலாக்‌ஷ் லிக்கியிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மீன்வளத்து றை செயலாளர் அபிலாக்‌ஷ் லிக்கியிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பின் தலைவர் நல்லதம்பி வழங்கிய கடிதத்தில், “இந்திய அரசு தமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவை 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுத்தது. இதனால் கடந்த 52 வருடங்களாக தமிழக மீனவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறோம்.

இதுவரை சுமார் 560-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீனவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தடைபட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த ஆவன செய்ய வேண்டும். இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான குழுவில் இந்திய - இலங்கை பாரம்பரிய மீனவர்களையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். பாக் நீரணை இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடல் பகுதி ஆக இருப்பதால், பாக் நீரணை கடல் பகுதிகளுக்கு பிரத்தியோக மீன்பிடி அறிவிப்பாணையை உருவாக்க வேண்டும்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>மத்திய மீன்வளத் துறை செயலாளர் அபிலாக்‌ஷ் லிக்கியிடம் கோரிக்கை மனு அளித்த தேசிய  பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பின் தலைவர் நல்லதம்பி</p></div>
புதுச்சேரி: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முதல்வரிடம் பேரவை தலைவர் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in