“புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்” - அமைச்சர் அமைச்சர் வன்னியரசு

தருமபுரியில் கல்லூரி மாணவியர் விடுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு  மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர்.

தருமபுரியில் கல்லூரி மாணவியர் விடுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தருமபுரி: தருமபுரியில் அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி கட்டிடம் ஆகியவற்றை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவ, மாணவியரின் கல்வி, சுகாதாரம் ஆகியவை தொடர்பாக தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சமூக நீதித்துறை மானிய கோரிக்கையின்போது விடுதி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவுத் தொகை மற்றும் பராமரிப்புத் தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னாளில் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் புதியதாக தலைமைச் செயலகம் கட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் விடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பரிசீலிப்பது முக்கியம். இதுகுறித்து முதல்வர் உரிய முடிவுகளை மேற்கொள்வார். இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

<div class="paragraphs"><p>தருமபுரியில் கல்லூரி மாணவியர் விடுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு  மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர்.</p></div>
காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in