டெல்லியில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் தீ: ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் தீ: ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
Updated on: 
1 min read

சென்னை: டெல்​லி​யில் இருந்து சென்னை வந்து கொண்​டிருந்த பயணி​கள் விமானத்​தின் லக்​கேஜ் கேபினில் திடீரென தீ பிடித்​த​தால், அவசர​மாக ஹைத​ரா​பாத் விமான நிலை​யத்​தில் தரை​யிறக்​கப்​பட்​டது.

டெல்​லி​யில் இருந்து நேற்று பகல் 1.30 மணிக்கு தனி​யார் பயணி​கள் விமானம் சென்​னைக்கு புறப்​பட்​டது. விமானத்​தில் 174 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் உட்பட 180 பேர் இருந்​தனர். பிற்​பகல் 3 மணி அளவில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்து கொண்​டிருந்​த​போது, விமானத்​தில் உள்​பகு​தி​யில் உள்ள பயணி​கள் லக்​கேஜ் கேபின் பகு​தி​யில் இருந்து புகை வெளி​யேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி​கள், விமான பணிப்​பெண்​கள், உடனடி​யாக விமானிக்கு தகவல் தெரி​வித்​தனர்.

அப்​போது, விமானம் ஹைத​ரா​பாத் அருகே வந்து கொண்டு இருந்​தது. அதனால், விமானி ஹைத​ரா​பாத் விமான நிலை​யத்​துடன் அவசர​மாக தொடர்​பு​கொண்​டு, தகவலை தெரி​வித்​தார். பின்​னர் அனு​மதி கிடைத்​ததும், விமானத்தை ஹைத​ரா​பாத்​தில் அவசர​மாக தரை​யிறக்​கி​னார். அதற்​குள் லக்​கேஜ் கேபின் பகுதி தீப்​பிடித்து எரி​யத் தொடங்​கியது. உடனடி​யாக விமான ஊழியர்​கள், அவசர கால அணைப்​பான்​கள் மூலம் தீயை அணைக்க தொடங்​கினர்.

விமான நிலை​யத்​தில் இறங்​கியதும் தீயணைப்​புத் துறை​யினர் விமானத்​துக்​குள் சென்று தீயை முழு​வது​மாக அணைத்​தனர். விமானம் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​ட​தால் பெரும் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது.

பயணி ஒரு​வர் செல்​போனுக்கு சார்ஜ் போடும் பவர் பேங்​கை, லக்​கேஜுக்​குள் வைத்து கேபினுக்​குள் வைத்​திருந்​ததும், அந்த பவர் பேங்​கில் இருந்து மின் கசிவு ஏற்​பட்டு தீ பிடித்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் தீ: ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in