

கோப்புப் படம்
குன்னூர்: குன்னூர் வந்த நீலகிரி மலை ரயிலின் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை நீலகிரி மலை ரயில் குன்னூர் நோக்கி வந்தது.
குன்னூர் அருகே வந்தபோது திடீரென ரயில் இன்ஜினில் தீப்பிடித்து, புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர் கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டு, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் ரயில் சேவை தொடங்கப்பட்டது.