இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்: தலைநகரை முற்றுகையிட்ட அரசியல் தலைவர்கள்

சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்தல் வரும் 23-ம் தேதி நடை​பெறுகிறது. இத்தேர்​தலில் 5.73 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். திமுக, அதி​முக, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவி வரும் நிலை​யில், இவர்​களு​டன் சுயேட்​சைகள் என மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தமிழகம் முழு​வதும் ஒரு மாதத்​துக்​கும் மேலாக தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்த பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைய ​உள்ள நிலை​யில், நேற்று தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தலைநக​ரான சென்​னையை முற்​றுகை​யிட்டு தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் டெல்லி முன்​னாள் அரவிந்த் கேஜ்ரி​வால் ஆகியோர் இணைந்து திருவிக நகர் ரவிச்​சந்​திரன், எழும்​பூர் தமிழன் பிரசன்​னா, துறை​முகம் சேகர்​பாபு, ராயபுரம் சுபேர்கான், பெரம்​பூர் ஆர்​.டி.சேகர், ஆர்​.கே.நகர் எபினேசர் ஆகிய திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தனர்.

அதிமுக வேட்பாளர்களான வில்லிவாக்கம் தொகுதி விஜயகுமார், அண்ணாநகர் கோகுல இந்திரா, தி.நகர் சத்யா ஆகியோரை ஆதரித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.

பாஜக வேட்பாளர்களான ஆவடி தொகு​தி​ வேட்​பாளர் ராஜசிம்ம மகேந்​தி​ரா, மயி​லாப்​பூர் தமிழிசை சவுந்​தர​ராஜன், தாம்​பரம் அதி​முக வேட்​பாளர் சிட்​ல​பாக்​கம் ராஜேந்​திரன்​,பல்​லா​வரம் ஐஜேகே வேட்​பாளர் வெங்​கடேசன் ஆகியோரை ஆதரித்து தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை வாக்கு சேகரித்​தார்.

தவெக தலை​வர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களான தாம்​பரம் சரத்​கு​மார், பொன்​னேரி ரவி, வில்​லி​வாக்​கம் ஆதவ் அர்​ஜு​னா, தி.நகர் என்​.ஆனந்த் ஆகியோரை ஆதரித்து ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்​தார்.

<div class="paragraphs"><p>சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.</p></div>
ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in