இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்றுவரை அவகாசம்

நாளை தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடக்கம்
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்றுவரை அவகாசம்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வேட்​புமனுக்​களை திரும்​பப் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணி​யுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்​டியல் வெளி​யாகிறது. அதன் அடிப்​படை​யில் நாளை தபால் வாக்​கு​கள் அச்​சிடும் பணி​கள் தொடங்​கு​கின்​றன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொங்​கியது. ஏப்​.6-ம் தேதி​யுடன் வேட்​புமனு தாக்​கல் நிறைவடைந்​தது.

இதன்படி 234 தொகு​தி​களில் மொத்​தம் 7,599 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதன்தொடர்ச்சியாக 7-ம் தேதி வேட்​புமனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இதில் 5,072 வேட்​புமனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. முறை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டாத 2,464 வேட்​புமனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன.

குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்​டி​யிடும் சேலம் மாவட்டம் எடப்​பாடி தொகு​தி​யில் வேட்​புமனு தாக்​கல் செய்த தவெக வேட்​பாளர் மற்​றும் அவருக்கு மாற்று வேட்​பாளர் ஆகிய இரு​வரின் வேட்பு மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​டன.

இதனால் அக்கட்சி போட்​டி​யிடும் தொகு​தி​களின் எண்​ணிக்கை 233 ஆக குறைந்​துள்​ளது. நேற்று வரை 70-க்​கும் மேற்​பட்ட வேட்​புமனுக்​கள்திரும்​பப் பெறப்​பட்​டன. இன்று மாலை 3 மணி​யோடு வேட்​பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்கான அவகாசம் நிறைவடைகிறது.

அதன் பின்​னர் தொகுதி வாரி​யாக இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். இன்று மாலையே சுயேச்சை வேட்​பாளர்​களுக்​கான சின்​னங்​களும் ஒதுக்​கப்பட உள்​ளது. நாளை (ஏப்​.9) அந்​தந்த தொகு​தி​களுக்​கான தபால் வாக்​கு​கள் அச்​சிடும் பணி​கள் தொடங்​கு​கின்​றன.

அதற்​கடுத்து பயிற்​சிக்கு வரும் தேர்​தல் அலு​வலர்​கள், வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்கு தபால் வாக்​கு​கள் வழங்​கப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஒவ்​வொன்​றி​லும் 16 வேட்​பாளர்​கள் இடம்​பெறு​வர்.

வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப கூடு​தல் இயந்​திரங்​கள் சேர்க்​கப்​படும். அதி​கபட்​ச​மாக 4 அலகு​களை சேர்க்க முடி​யும். அவற்​றில் 63 வேட்​பாளர்​கள் மற்​றும் ஒரு நோட்டா பொத்​தான் இடம்​பெறும்.

ஏற்​கெனவே, தொகுதி வாரி​யாக வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பிரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் வேட்​பாளர்​களின் பெயர்​கள் மற்​றும் சின்​னங்​களை பொருத்​தும் பணிகள் ஓரிரு தினங்​களில் தொடங்க உள்​ளன.

இதற்கான பயிற்சியும் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூத் ஸ்லிப் நாளை​முதல் வழங்​கப்பட உள்​ளது. ஏப்​.17-ம் தேதிக்​குள் முடிக்​க​வும் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறும் வாக்​குப்​ப​தி​வில் 5.73 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். அதற்​காக 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. பாது​காப்​புப் பணி​யில் 23 ஆயிரத்துக்​கும் மேற்​பட்ட துணை ராணுவப் படை​யினர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்றுவரை அவகாசம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஏப்ரல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in