மதம் மாறியவர்களை பிசி, எம்பிசி பட்டியலில் இருந்து நீக்கக்கோரிய வழக்கில் டிச.18-ல் இறுதி விசாரணை

உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on: 
2 min read

மதுரை: மதம் மாறிய​வர்​களை பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பட்​டியலில் இருந்து நீக்​கக் கோரிய வழக்​கில் டிச.18-ல் இறுதி விசா​ரணை நடை​பெறும் என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர்​களை பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பட்​டியலில் இருந்து நீக்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மதுரை மாவட்​டம் மேலூர் தெற்கு தெரு​வைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்​பவர் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு விசா​ரித்து, “இந்த வழக்கு தமிழகத்​தின் இட ஒதுக்​கீடு தொடர்​பான சட்​டக் கோட்​பாடுகளின் அடித்​தளத்தை கேள்​விக்​குள்​ளாக்கி இருப்​ப​துடன் அரசி​யலமைப்​புச் சட்ட விவாதங்​களை​யும் எழுப்​பியுள்​ளது.

எனவே, வழக்கு விசா​ரணைக்கு ஏற்​கப்​படு​கிறது. இந்த மனு தொடர்​பாக தமிழக அரசு மற்​றும் டிஎன்​பிஎஸ்சி தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். மனுதா​ரர் இடைக்​கால நிவாரணம் வேண்​டும் என்​றால் அதற்கு தனியாக மனு தாக்​கல் செய்​ய​லாம்” என உத்​தர​விட்​டனர்.

அதன்​படி, இடைக்​கால நிவாரணம் கோரி கோடீஸ்வரன் மனு தாக்​கல் செய்​தார். அந்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 4 பிரிவு​களில் காலியாக உள்ள 6,574 குரூப் 4 பணி​யிடங்​களை நிரப்​புவது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி அக்.6-ல் அறி​விப்பு வெளி​யிட்​டது. இப்​பணி​யிடங்​களுக்​கான தேர்வு அடுத்த ஆண்டு ஜன. 10-ல் நடை​பெறுகிறது.

இப்​பணி​யிடங்​களில் 26.5 சதவீத பணி​யிடங்​கள் பிசி வகுப்​பினருக்​கும், 20 சதவீத பணி​யிடங்​கள் எம்​பிசி மற்​றும் சீர்​மரபினர் பிரிவுக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு 200 இடங்​கள் கொண்ட தொகுப்​பில் 53 இடங்​கள் பிசிக்​கும், 40 இடங்​கள் எம்​பிசி மற்​றும் சீர்​மரபினருக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பி​ரி​வினருக்​கான இடஒதுக்​கீடு உண்​மையில் இப்​பி​ரிவு​களை சேர்ந்​தவர்​களுக்கு வழங்​கப்​படுவதில்லை. இந்து மதத்​தில் இருந்து கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய பல சாதி​யினர் தொடர்ந்து பிசி, எம்​பிசி மற்​றும் சீர்மரபினர் பிரிவு​களில் தொடர்​கின்​றனர். இப்​பி​ரிவை சேர்ந்​தவர்​களின் அரசுப் பணிகளை மதம் மாறிய​வர்​கள் பெறுகின்​றனர். இத​னால் இடஒதுக்​கீட்​டின் உண்​மையான நோக்​கம் பாதிக்​கப்​படு​கிறது.

தற்​போதுள்ள அட்​ட​வணை​யின்​படி பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் பிரி​வினருக்​கான இட ஒதுக்​கீடு இடங்​கள் நிரப்​பப்​பட்​டால் என்​னைப் போன்​றவர்​களுக்கு பாதிப்பு ஏற்​படும். எனவே, குரூப் 4 பணி​யிடங்​களில் பிசி, எம்​பிசி, சீர்​மரபினர் இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்​டோரின் பட்​டியலை வெளி​யிட​வும், நேர்​காணல் நடத்தி பணி நியமன ஆணை வழங்​கவும் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “இந்த வழக்கை அவசர​மாக விசா​ரிக்க தற்​போது அவ​சி​யம் ஏற்​பட​வில்லை. குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம்​தான் நடை​பெறுகிறது. தனிப்​பட்ட முறை​யில் மனுதா​ரர் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இதை பொதுநல வழக்​காக கருதக்​கூடாது. எனவே, மனுவை அவசர​மாக விசா​ரித்து இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டியதில்லை.

அரசு தரப்​பில் விரிவான பதில் மனு தாக்​கல் செய்​யப்​படும். அதற்கு அவகாசம் வழங்க வேண்​டும்” என கூறப்​பட்​டது. இதையேற்று விசா​ரணையை டிச.18-க்கு தள்​ளிவைத்த நீதிப​தி​கள், அன்​றைய தினம் இறுதி விசா​ரணை நடை​பெறும் என்று தெரி​வித்​தனர்.

Santhanakoodu Festival
திமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் ரூ.2,000 கோடி ஊழலா? - எ.வ.வேலு மறுப்பு

X