மாநிலங்களவை  தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

தமிழகத்தில் விரைவில் 6 இடங்களின் பதவிக்காலம் முடிகிறது
Published on

மாநிலங்​கள​வைத் தேர்​தலுக்​கான வேட்பு மனுத் தாக்​கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலை​யுடன் நிறைவு பெறுகிறது. இது​வரை 3 சுயேச்​சைகள் மட்​டுமே மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

நாடு முழு​வதும் 37 மாநிலங்​களவை எம்​.பி.க்​களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலை​யில், மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடத்த தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. தமி​ழ​கத்​தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கனி​மொழி என்​.​வி.என்​,சோ​மு, என்​.ஆர்​.இளங்​கோ, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், அதி​முகவைச் சேர்ந்த மு.தம்​பிதுரை, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் ஆகிய 6 பேரின் பதவிக் கால​மும் முடிவடைகிறது.

இந்த 6 இடங்​களுக்கு புதிய உறுப்​பினர்​களைத் தேர்வு செய்​வதற்​கான வேட்பு மனுத் தாக்​கல் கடந்த பிப்​.26-ல் தொடங்​கியது. மனுத் தாக்​கல் செய்ய நாளை மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 6-ம் தேதி வேட்பு மனுக்​கள் பரிசீலிக்​கப்​படும்.

மனுக்​களை வாபஸ் பெற மார்ச் 9-ம் தேதி இறுதி நாளாகும். அன்று இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். போட்டி இருப்​பின் மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடை​பெறும்.

இந்​நிலை​யில், நேற்று வரை சேலம், மேட்​டூரைச் சேர்ந்த தேர்​தல் மன்​னன் என்று அறியப்​படும் கு.பத்​ம​ராஜன், திருச்சி குழு​மணி​யைச் சேர்ந்த கே.பி.எம்​.​ராஜா, சென்னை அம்​பத்​தூரைச் சேர்ந்த டி.கே.மேஷாக் கிரு​பாகரன் ஆகிய 3 சுயேச்சை வேட்​பாளர்​கள் மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த 6 மாநிலங்​களவை இடங்​களை பொறுத்தவரை திமுக தரப்​புக்கு 4, அதி​முக​வுக்கு 2 இடங்​கள் கிடைக்​கும். இது​வரை, திமுக, அதி​முக தரப்​பில் வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட​வில்​லை. இன்​றைக்​குள் வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்டு நாளை இறுதி நாளில் மனுத் தாக்​கல் செய்​யப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

காங்​கிரஸ் பிடி​வாதம்: திமுகவைப் பொறுத்த வரை​யில், கட்​சி​யின் மூத்த நாடாளு​மன்​றக் குழுத் தலை​வ​ராக இருக்​கும் திருச்சி சிவாவுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படலாம் எனத் தெரி​கிறது. மற்​றொரு இடத்தை திமுக செய்​தித் தொடர்​பாளர் கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரனுக்கு வழங்க முதலில் முடிவு செய்​யப்​பட்​டது.

மீத​முள்ள 2 இடங்​களில் ஒன்றை தேமு​திக பொருளாளர் சுதீஷுக்​கும், மற்​றொன்​றைக் காங்​கிரஸுக்​கும் வழங்க திமுக தலைமை திட்​டம் வைத்​திருந்​தது. ஆனால் காங்​கிரஸோ, "எங்​களுக்கு மாநிலங்​களவை சீட் வேண்​டாம்; அதற்​குப் பதில் கூடு​தல் சட்​டமன்​றத் தொகு​தி​கள் வேண்​டும்" என்​ப​தில் பிடி​வாத​மாக இருக்​கிறது.

இதனால், கான்​ஸ்​டன்​டைனுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுத்​து​விட்​டு, அவர் இடத்​தை​யும் சேர்த்து 2 இடங்​களைக் காங்​கிரஸுக்கே வழங்கி சரி கட்​டலாம் என திமுக தலைமை ஆலோ​சித்​தது. அதற்​கும் காங்​கிரஸ் உடன்​பட​வில்லை என்​ப​தால் கூட்​ட​ணி​யில் குழப்​ப​மான சூழலே நீடிக்​கிறது.

அதி​முக​வில் தம்​பிதுரைக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கு​வது உறு​தி​யாகி​விட்​டது. மற்​றொரு இடத்​துக்கு அன்​புமணி மற்​றும் ஜி.கே.​வாசன் இடையே பலப்​பரீட்சை நடந்து வரு​கிறது.

"கடந்த முறை அதி​முக தயவில் சீட் வாங்​கி​விட்டு பாஜக பக்​கம் சென்​று​விட்​டார் வாசன். எனவே, அவருக்கு மீண்​டும் தரமுடி​யாது" என அதி​முக தரப்பு கறா​ராகச் சொல்​லி​விட்​டது. மறு​பக்​கம், ‘‘அ​தி​முக சீட் கொடுத்​தா​லும் உங்​களுக்கு உண்​மை​யாகவே இருந்​தேன்; எனக்கு மீண்​டும் சீட் வாங்​கித் தாருங்​கள்’’ என்று பாஜக​விடம் வாசன் வலி​யுறுத்தி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இதற்​கிடை​யில், ‘‘என் தந்​தையை பகைத்​து​விட்டு உங்​களு​டன் கைகோர்த்​திருக்​கிறேன். எனவே எனக்​கு​தான் சீட் வேண்​டும்’’ என்று அன்​புமணி பிடி​வாதம் காட்டி வரு​கி​றார்.

இதற்​கிடை​யில், முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், ‘‘கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு எம்​.பி. சீட் கொடுக்க வேண்​டாம். அவர்​கள் கடைசி​யில் நம்மை கழற்றி விட்​டு​விடு​வார்​கள். அதற்கு பதில் என் மகன் ஜெய​வர்​தனுக்கு சீட் கொடுங்​கள். கடந்த தேர்​தலில் அவர் தோற்​று​விட்​டார். இந்த முறை அவரை நாடாளு​மன்​றத்​துக்கு அனுப்ப விரும்​பு​கிறேன்’’ என்று எடப்​பாடி பழனி​சாமி​யிடம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதனால் அதி​முக​வின் 2-வது சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

மாநிலங்களவை  தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்: உடன்படிக்கை கையெழுத்து!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in